அமெரிக்க பாதுகாப்பபு அமைச்சின் பெயரை மாற்றும் ட்ரம்ப்
அமெரிக்க பாதுகாப்பபு துறையின் பெயரை போர் துறையாக ட்ரம்ப் மாற்றவுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், இன்று (செப் 5) பாதுகாப்பு அமைச்சின் பெயரை போர் அமைச்சு என மாற்றும் உத்தரவில் கையெழுத்திடவுள்ளார்.
இது அமெரிக்க இராணுவத்தின் வலிமையை வெளிப்படுத்தும் முயற்சியாக கருதப்படுகிறது.
1947-ஆம் ஆண்டு வரை இந்த அமைச்சு Department of War என அழைக்கப்பட்டு வந்தது. இரண்டாம் உலகப் போருக்குப்பிறகு, அதன் பெயர் Department of Defense என சட்டப்படி மாற்றப்பட்டது.
இந்த பெயர் மாற்றம் சட்டமன்ற ஒப்புதல் தேவைப்படலாம் என்ற சந்தேகத்திற்கு பதிலளித்த ட்ரம்ப், "நங்கள் நேரடியாகவே செய்யப்போகிறோம்" என தெரிவித்தார்.
மேலும், காங்கிரசின் ஒத்துழைப்பு கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
பென்டகன் தலைமை அதிகாரி Pete Hegseth, இந்த மாற்றத்தை ஆதரித்து சமூக ஊடகத்தில் "DEPARTMENT OF WAR" என பதிவிட்டுள்ளார்.
அவர் கடந்த மார்ச் மாதம் இதற்கான கருத்துக்கணிப்பையும் நடத்தியிருந்தார். ஜார்ஜியாவில் Fort Benning-ல் நடந்த நிகழ்வில், நாளை எனது பதவி பெயர் மாற்றலாம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இது நடவடிக்கை, அமெரிக்க இராணுவத்தின் அடையாளத்தை மாற்றும் முயற்சியாக பார்க்கப்படுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |