ரஷ்யாவின் Su-57 போர் விமானத்தை இந்தியாவில் தயாரிக்க திட்டம்
இந்தியாவில் Sukhoi Su-57 நாகா ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை உற்பத்தி செய்ய தேவையான முதலீடுகள் குறித்து குறித்து ரஷ்யா ஆராய்ந்துவருகிறது.
இது இந்தியா-ரஷ்யா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் ஏற்கெனவே ரஷ்யாவின் Su-30 MKI விமானங்களை நாசிக் ஆலையில் உற்பத்தி செய்து வருகிறது.
இதே உற்பத்தி வசதிகளை Su-57 விமானங்களுக்கும் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
ரஷ்யாவின் பல உபகரணங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படலாம் என்றும், இது செலவுகளை குறைக்கும் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் F-35 விமானத்துடன் போட்டியிடும் வகையில் S-57 விமானம் இந்தியாவிற்கு முக்கியமானதாக இருக்கலாம்.
இந்தியா கடந்த சில ஆண்டுகளாக தனது சொந்த ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை உருவாகிவருகிறது. இத்திட்டத்தின் கீழ், 2028-ஆம் ஆண்டுக்குள் முதல் விமானம் தயாராகவுள்ளது. மேலும் 2025-க்குள் முழுமையாக இயக்கத்திற்கு வரவுள்ளது.
முன்பு இந்தியா ரஷ்யாவின் ஐந்தாம் தலைமுறை விமான திட்டத்தில் பங்கேற்றிருந்தாலும், சில சிக்கல்களால் பின்வாங்கியது.
தற்போது உலகளாவிய சூழநிலையை கருத்தில் கொண்டு பழைய திட்டத்தை மீண்டும் தொடங்கும் வாய்ப்பு இருப்பதாகவும், ரஷ்யா இந்தியாவிடம் Su-57 விமானங்களை வாங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |