அவுஸ்திரேலியாவின் வீட்டு வசதி பிரச்சினையை தீர்க்க இந்தியா யோசனை
அவுஸ்திரேலியாவின் வீட்டு வசதி பிரச்சினையை தீர்க்க, நாடு முழுவதும் 1 மில்லியன் வீடுகளை கட்டும் திட்டத்தை இந்தியா முன்வைத்துள்ளது.
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தக பிரதிநிதிகளுடன் மும்பையில் நடந்த சந்திப்பில், அவுஸ்திரேலியாவிற்காக 10 லட்சம் வீடுகள் கட்ட இந்தியா தயாராக இருப்பதாக கூறினார்.
இது 500 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வாய்ப்பாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள மேசன்கள், எலெக்ட்ரீஷியன்கள், பிளம்பர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப நிபுணர்கள் போன்ற திறமையான தொழிலார்கள் அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பப்படலாம்.
அவர்களுக்கு தேவையான பயிற்சி மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் அவுஸ்திரேலிய தரநிலைகளுக்கு ஏற்ப வேலை செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார்.
இந்த யோசனை, இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா இடையேயான விரிவாக்கப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் பொது முன்வைக்கப்பட்டது.
அவுஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் டான் ஃபாரெல் மற்றும் இந்திய அரசு இடையே CECA (Comprehensive Economic Cooperation Agreement) ஒப்பந்தத்தின் இரண்டாவது கட்டம் குறித்து இறுதி நிலை பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த யோசனை நடைமுறைக்கு வந்தால், இந்திய தொழிலார்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும், மேலும் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகள் வலுப்பெறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India Australia housing deal, Piyush Goyal housing proposal, Indian workers in Australia, Australia housing crisis 2025, CECA India Australia agreement, 500 billion dollar housing plan India, Indian construction workers abroad, Free Trade Agreement India Australia