சீனாவில் ஜின்பிங் காரில் பயணித்த மோடி: Hongqi-யின் சிறப்பம்சங்கள்
சீனா சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்திய Hongqi காரின் சிறப்புகளை இங்கே பார்க்கலாம்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு இருந்த இரண்டு நாட்களும் Hongqi L5 Limousine காரை பயன்படுத்தினார்.
இதே காரை தான் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பயன்படுத்துகிறார். மேலும், இந்த கார் சீனாவின் உயர்மட்ட தலைவர்கள் மற்றும் முக்கிய வெளிநாட்டு பிரமுகர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
2019-ல் இந்தியா வந்திருந்த போதும், ஜின்பிங் இந்த காரில் தான் பயணம் செய்தார்.
Hongqi என்பது (Hong-chi) ஹொங்சி என உச்சரிக்கப்படுகிறது. மாண்டரின் மொழியில் 'சிவப்பு கோடி' என பொருள்.
இது FAW (First Automobile Works) எனும் அரசுக்கு சொந்தமான நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.
1958-ல் தொடங்கப்பட்ட இந்த பிராண்டு, சீனாவின் தேசிய பெருமையை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.
Hongqi L5 Limousine காரின் சிறப்பம்சங்கள்
6.0 லிட்டர் V12 என்ஜின், 400 horsepower திறன்
100 கி.மீ . வேகத்தை 8.5 வினாடிகளில் எட்டும் திறன்
5.5 மீட்டர் நீளம், 3 டன் எடை கொண்டது
உட்புறம் லெதர் இருக்கைகள், மர அலங்காரம், பின்புற இருக்கையில் மசாஜ், வெப்பம், குளிர்ச்சி வசதிகள் உள்ளன.
360 டிகிரி கமெரா, cruise control, சென்சார்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இதில் உள்ளன.
இதன் விலை சுமார் 5 மில்லியன் யுவான். இது தான் சீனாவின் மிக விலை உயர்ந்த கார்.
Hongqi கார் 1958-ல் CA72 எனும் மொடலில் தொடங்கியது. 1980 வரை CA770 மொடல்கள் தயாரிக்கப்பட்டன.
பின்னர் Audi, Lincoln போன்ற வெளிநாட்டு கார்களை ஹொங்சி பெயரில் விற்றனர். 2018-ல் FAW நிறுவனம் ஹொங்சியை புதிய வடிவில் அறிமுகப்படுத்தியது.
2024-ல் உலகம் முழுவதும் 4.1 லட்சம் வாகனங்கள் வீரப்பனை செய்யப்பட்டுள்ளன. ஐரோப்பா, மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா போன்ற பகுதிகளில் 1000 ஷோரூம்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கார், சீனாவின் அரசியல் மற்றம் தொழில்நுட்ப பெருமையை பிரதிபலிக்கும் ஒரு சின்னமாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
PM Modi China visit 2025, Hongqi L5 Xi Jinping car, SCO Summit Modi Xi meeting, Made in China luxury car, Modi Hongqi limousine, FAW Hongqi L5 features, Xi Jinping state car, India China diplomatic gesture, Modi Xi Jinping SCO 2025, Red Flag car China