இந்தியாவில் ரூ.60,000 கோடி முதலீடு செய்யும் ஜப்பான் - முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
ஜப்பான், இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.60,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பான் பயணத்தின்போது, இரு நாடுகளும் பல முக்கிய ஒப்பந்தங்களை கையெழுத்திட்டதன் பின்னணியில் இந்த முதலீடு அறிவிக்கப்பட்டது.
இந்தியா-ஜப்பான் முக்கிய ஒப்பந்தங்கள்
ISRO-JAXA Chandrayaan collaboration: இந்தியாவின் சந்திரயான்-5 திட்டத்தில் ஜப்பானின் ஜாக்ஸா விண்வெளி நிறுவனம் இணைந்து பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
Strategic Sector Collaboration: முக்கிய கனிம வளங்களை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தம், இது இரு நாடுகளுக்கிடையே மூலோபாய துறைகளில் ஆழமான ஒத்துழைப்பை உருவாக்கும்.
Joint Crediting Mechanism: ஜப்பானிய முதலீடுகளை ஊக்குவித்தது, இந்தியாவின் பசுமை ஆற்றல் மாற்றத்திற்கு ஆதரவாக கார்பன் வெளியீட்டை குறைக்கும் திட்டம்.
India-Japan Partnership 2.0: டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, டிஜிட்டல் திறமை மற்றும் எதிர்கால தொழில்நுட்ப துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும் திட்டம்.
மேலும், தூய்மை ஆற்றல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விண்வெளி ஆராய்ச்சி, கலாச்சார பரிமாற்றம் மற்றும் தூதரக பயிற்சி போன்ற துறைகளிலும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்த ஒப்பந்தங்கள் இந்தியா-ஜப்பான் இடையேயான பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Japan India investment 2025, Rs 60000 crore Japan investment, Modi Japan economic deal, India Japan MoU 2025, Chandrayaan-5 JAXA ISRO, Indo-Japan digital partnership, Japan clean energy India, India Japan defence roadmap, Japanese FDI in India, India Japan strategic ties