ஜேர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் 6-ஆம் தலைமுறை போர் விமான திட்டம் - 100 பில்லியன் யூரோ முதலீடு
100 பில்லியன் யூரோ முதலீட்டில் புதிய 6-ஆம் தலைமுறை விமானங்களை உருவாக்கும் முயற்சியில் ஐரோப்பிய நாடுகள் இறங்கியுள்ளன.
அமெரிக்காவின் F-35 Lightening II மற்றும் சீனாவின் J-20 MightyDragon போர் விமானங்கள் உலகளாவிய ரீதியில் 5-ஆம் தலைமுறை போர்விமானங்களாக ஆதிக்கம் செலுத்துகின்றன.
இதற்கு பதிலாக, ஐரோப்பா குறிப்பாக பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இணைந்து Future Combat Air System (FCAS) என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.
இது 6-ஆம் தலைமுறை போர் விமானம் உருவாக்கும் நோக்கில் 100 பில்லியன் யூரோ மதிப்பில் செயல்படுகிறது.
FCAS விமானத்தின் சிறப்பம்சங்கள்
- Stealth Technology - ரேடாரில் கண்டறிய முடித்த வகையில் வடிவமைக்கப்படும்
- வேகம் - Mach 2.5 வரை (மணிக்கு 3000 கி.மீ.) வேகத்தில் பயணிக்கும் திறன்
- தூரம் - 3,500 முதல் 4,000 கி.மீ. வரை refueling இல்லாமல் பறக்கும்
- AI மற்றும் DroneSwarms - AI மூலம் ட்ரோன் குழுக்களை கட்டுப்படுத்தும் திறன்
- அதிநவீன ஆயுதங்கள் - லேசர் ஆயுதங்கள், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள்
- Network-Centric Warfare - வான்வழி, தரை மற்றும் செயற்கைகோள் தகவல்களை ஒருங்கிணைக்கும் டிஜிட்டல் போர் பிணைப்பு
இந்த விமானத்தின் முதல் demo 2029-2030-க்குள் இருக்கும் என கூறப்படுகிறது.
2035-2037-க்கும் தொடர்ந்து உற்பத்தி செய்யப்படும்.
2040-க்குள் ஐரோப்பிய விமானப்படையில் சேவைக்கு வருமென எதிர்பார்கப்படுகிறது.
இத்திட்டத்தில், பிரான்சின் Dassault Aviation 80 சதவீதம் கோர, ஜேர்மனி சமநிலை பங்கீடு கேட்கிறது. இது இரு நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இறுதி முடிவு 2025 இறுதிக்குள் எடுக்கப்படும்.
இந்த திட்டம் ஐரோப்பாவை அமெரிக்க தொழில்நுட்ப சார்பிலிருந்து விடுவித்து, உலகளாவிய விமானப் பாதுகாப்பைல் புதிய கட்டத்தை உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
sixth generation fighter jet, FCAS fighter jet Europe, France Germany fighter jet deal, F-35 vs FCAS, J-20 vs FCAS, European stealth aircraft, future combat air system, Dassault Airbus fighter jet, AI drone swarm fighter, 2040 fighter jet Europe