ஏற்கனவே 300 குழந்தைகள்... சீன கோடீஸ்வரரின் வாடகைத் தாயாக கலிபோர்னியப் பெண்
California woman discovers she's the surrogate for Chinese billionaire: சீன கோடீஸ்வரருக்கு வாடகைத் தாயாக இருப்பதை கலிபோர்னியா பெண் கண்டறிந்தார்.
சுமார் 300 குழந்தைகளுக்குத் தந்தையாகக் கருதப்படும் சீனாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரர் ஒருவரின் குழந்தையைத் தான் சுமந்து கொண்டிருப்பதை கலிபோர்னியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கண்டறிந்துள்ளார்.
பிரம்மாண்டமான குடும்பம்
தொடர்புடைய பெரும் கோடீஸ்வரர் குறித்து கசிந்துள்ள ஆவணங்களை சிபிஎஸ் செய்தி நிறுவனம் ஆய்வு செய்து, அந்தக் கலிபோர்னியா பெண்ணின் கர்ப்பத்தை சீன தொழிலதிபர் சூ போவுடன் தொடர்புபடுத்தியபோதுதான் குழந்தையின் தந்தை பற்றித் தெரிந்துகொண்டதாக அவர் கூறியுள்ளார்.

100-க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட பிரம்மாண்டமான குடும்பங்களை உருவாக்குவதன் மூலம், குடும்ப வம்சத்தை விரிவுபடுத்த அமெரிக்க வாடகைத் தாய்மார்களைப் பயன்படுத்தும் சீனப் பெரும் கோடீஸ்வரர்கள் குறித்த தகவல் ஒன்று கடந்த ஆண்டு வெளியாகியிருந்தது.
அப்படியான ஒரு பெரும் கோடீஸ்வரர், 48 வயதாகும் சூ போ. இவர் சாகசமான வீடியோ கேம்களை உருவாக்கி பெரும் பணம் ஈட்டி வருபவர்.
அவர் இதற்கு முன்பு தனக்கு நிறைய குழந்தைகள் வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், 300 குழந்தைகள் வரை பெற்றெடுத்ததை மறுக்கிறார்.
வாடகைத் தாயாகச் செயல்படுவதற்கு 120,000 டொலர் வழங்கப்படும் என்று இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரத்தைப் பார்த்த பிறகு, கலிபோர்னியாவைச் சேர்ந்த அவர் அதற்கு முயன்றுள்ளார்.
ஏழு வயது குழந்தையுடன் தனித்து வாழும் அவர், இந்த பணம் தனது நிதி நிலையை மேம்படுத்த ஒரு வாய்ப்பாக இருப்பதாக கூறினார். மேலும், Patriot Conceptions என்ற நிறுவனம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாடகைத் தாய் முறை மூலம் சூ (Xu) நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்தி வெளியிட்டுள்ளது; அதேவேளையில், அவருக்கு 300 குழந்தைகள் வரை இருக்கலாம் என்று அவரது முன்னாள் இணையான டாங் ஜிங் (Tang Jing) குறிப்பிட்டுள்ளார்.
சூ போவின் நிறுவனமான டுவோயி நெட்வொர்க் (Duoyi Network), அந்தச் செய்தியின் சில பகுதிகளை மறுத்தது. மேலும், சூ ஒட்டுமொத்தமாக 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்டிருப்பதை ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் அதே வேளையில், அமெரிக்காவில் வாடகைத் தாய் முறை மூலம் பிறந்த 12 குழந்தைகளின் பொறுப்பு அவரிடம் உள்ளதாக அந்நிறுவனம் கூறியது.
உயர்தரமான 50 ஆண் குழந்தைகள்
சூவின் (Xu) பிள்ளைகளில் பலர் கலிபோர்னியாவின் இர்வைன் (Irvine) நகரில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருவதாகவும், அவர்கள் குழந்தைப் பராமரிப்பாளர்களால் வளர்க்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

48 வயதான அந்தப் பெரும் பணக்காரரும் தனிமையை விரும்புபவருமான சூ, தன்னைத்தானே சீனாவின் முதல் தந்தை என்று அழைத்துக்கொள்வதோடு, குறைந்தது 50 உயர்தரமான ஆண் குழந்தைகளை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார் என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே, கலிபோர்னியப் பெண்மணி பலமுறை சூவின் அலுவலகத்தைத் தொடர்புகொள்ள முயன்றும், ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் Patriot Conceptions நிறுவனம் சூவின் வாடகைத் தாயான கலிபோர்னியப் பெண்மணிக்கான முகமை தாங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.