ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசி உரையாடல்... ஒற்றை கோரிக்கை: கோபத்தின் உச்சத்தில் அலறிய ஜோ பைடன்
உதவி கோரிய நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கோபத்தில் அலறியதாக கூறப்படுகிறது.
உக்ரைனுக்கு ஆதரவளிக்க அமெரிக்கா தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் முன்னெடுத்த தொலைபேசி உரையாடலின் போது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கோபத்தின் உச்சியில் அலறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர், இதுவரை 1 பில்லியன் டொலர் அளவுக்கு இராணுவ உதவிகளை அமெரிக்கா மட்டும் முன்னெடுத்துள்ளது. ஆனால் மீண்டும் மீண்டும் உதவி கோரிய நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கோபத்தில் அலறியதாக கூறப்படுகிறது.
@Shutterstock
தொடர்புடைய சம்பவம் ஜூன் மாதம் அரங்கேறியுள்ளது. இரு தலைவர்களும் போரின் நிலை குறித்து விவாதித்ததன் நடுவே, ஜெலென்ஸ்கி தமக்கு தேவையான ஆயுதங்கள் குறித்து பட்டியலிட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த ஜோ பைடன், கோபத்தில் அலறியதுடன், அமெரிக்க மக்கள் உக்ரைனுக்கு தாராளமாக ஆதரவளித்துள்ளனர் என்பதை மறக்க வேண்டாம் எனவும், ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு ஆதரவளிக்க அமெரிக்கா தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க நிர்வாகமும் தங்கள் இராணுவத்துடன் இணைந்து உக்ரைனுக்கு கணிசமான ஆதரவை வழங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, ஜெலென்ஸ்கி அறிக்கை மூலமாக மன்னிப்பு கோரியதாகவும், அமெரிக்காவின் உதவிகளுக்கு நன்றி கூறியதுடன், வாழ்நாளில் மறக்க முடியாத செயல் என பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.
@AFP
ஜெலென்ஸ்கி வெளிப்படையாக மன்னிப்பு கோரியுள்ளதை அடுத்து, இரு தலைவர்களும் மீண்டும் நெருக்கமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொலைபேசி அழைப்பில் அமெரிக்க ஜனாதிபதி கோபத்தில் அலறியதை அடுத்து, தமது ஆலோசகர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இணைந்து, குறித்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர ஜெலென்ஸ்கி கடுமையாக உழைத்ததாக கூறப்படுகிறது.