26 ரன்னுக்கு ஆல்அவுட் ஆன அணி! ஒருவர் மட்டுமே இரட்டை இலக்க ஸ்கோர்
கம்போடியா மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20யில் சிங்கப்பூர் அணி 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
கம்போடியா மகளிர் கிரிக்கெட் அணி சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி தேசிய மைதானத்தில் நடந்தது. முதலில் ஆடிய சிங்கப்பூர் அணி 3 விக்கெட்டுக்கு 151 ஓட்டங்கள் குவித்தது.
ஷபினா மகேஷ் (Shafina Mahesh) 58 ஓட்டங்களும், வினு குமார் (Vinu Kumar) 42 ஓட்டங்களும் எடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய கம்போடியா அணியில் முதல் பந்திலேயே அணித்தலைவர் பேச் பிசா கிளீன் போல்டாகி வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து வந்த வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னை தாண்ட முடியாமல் ஆட்டமிழந்தனர். லி ஸோமகர மட்டும் 10 ஓட்டங்கள் எடுக்க, கம்போடியா அணி 11 ஓவர்களில் 26 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்மூலம் சிங்கப்பூர் அணி 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷபினா மகேஷ் 3 விக்கெட்டுகளும், ஹரேஷ் தவினா மற்றும் ரியா பாஸின் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |