The Hundred: 181 ரன் இலக்கை 98 பந்துகளில் எட்டிய அணி..ருத்ர தாண்டவமாடிய கேப்டன்
100 பந்துகளில் கிரிக்கெட் போட்டியில் லியாம் லிவிங்ஸ்டனின் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பெர்ரேரா 63 ஓட்டங்கள்
எட்ஜபாஸ்டனில் நடந்த போட்டியில் ஓவல் இன்வின்சிபிள் மற்றும் பர்மிங்காம் பீனிக்ஸ் அணிகள் மோதின.
Trent Boult gets Tawanda Muyeye! 🎳#TheHundred pic.twitter.com/DgkqW6caIr
— The Hundred (@thehundred) August 12, 2025
முதலில் ஆடிய ஓவல் இன்விசிபிள் (Oval Invincibles) அணி 8 விக்கெட்டுக்கு 180 ஓட்டங்கள் குவித்தது.
டோனோவன் பெர்ரேரா 29 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் விளாசினார்.
ஜோர்டன் காக்ஸ் 30 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 44 ஓட்டங்களும், ரஷீத் கான் 16 (9) ஓட்டங்களும் எடுத்தனர்.
தெறிக்கவிட்ட லிவிங்ஸ்டன்
பின்னர் களமிறங்கிய பர்மிங்காம் பீனிக்ஸ் (Birmingham Phoneix) அணியில் வில் ஸ்மீத் அதிரடியில் நொறுக்கினார்.
😮💨#TheHundred pic.twitter.com/VNIpRAfiSu
— The Hundred (@thehundred) August 12, 2025
பென் டக்கெட் 7 ஓட்டங்களிலும், ஜோ கிளார்க் 27 ஓட்டங்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். அரைசதம் விளாசிய வில் ஸ்மீத் (Will Smeed) 29 பந்துகளில் 51 ஓட்டங்கள் குவித்தார்.
ருத்ர தாண்டவமாடிய அணித்தலைவர் லியாம் லிவிங்ஸ்டன், ஆட்டமிழக்காமல் 27 பந்துகளில் 69 ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 5 சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கும். இதன்மூலம் பர்மிங்காம் அணி 98 பந்துகளில் 182 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
And that's how you complete a run chase! 🤩#TheHundred pic.twitter.com/OX0BA7IsHp
— The Hundred (@thehundred) August 12, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |