ஒவ்வொருவர் வீட்டிலும் தனி விமானம்..!ஆச்சரியமூட்டும் அமெரிக்காவின் ஏர்பார்க் நகரம்
அமெரிக்காவின் கேமரூன் ஏர்பார்க் என்ற நகரில் வசிக்கும் மக்கள் அனைவரும் தங்களுக்கென்று தனி விமானங்களை வைத்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேமரூன் ஏர்பார்க்
பொதுவாக ஒரு நகரில் உள்ள சாலைகளில் கார்கள் மற்றும் டூவீலர்கள் வரிசைகட்டி நிற்பதை பார்க்க முடியும், ஆனால் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கேமரூன் ஏர்பார்க் என்ற நகரின் சாலையில் விமானங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
இதன் முழுமையான அர்த்தம் அந்த நகரில் வசிக்கும் மக்கள் அனைவரும் தங்களுக்கென்று தனி சிறிய ரக விமானங்களை வைத்துள்ளனர் என்பதே.
Cameron Airpark
இரண்டாம் உலக போருக்கு பிறகு அமெரிக்கா விமானங்களை செயல்பாட்டை ஊக்குவித்தது, அதன் அடிப்படையில் தான் விமான நிலையங்களை ஓய்வு பெற்ற விமானிகளின் குடியிருப்பு பூங்காவாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்தது.
அதன்பேரில் தான் கேமரூன் ஏர்பார்க் 1963ம் ஆண்டு கட்டப்பட்டது, இங்கு மொத்தம் 124 வீடுகள் உள்ளது.
இங்கு வசிப்பவர்கள் பொதுவாக வேலைக்கு செல்லவோ அல்லது தங்களது பிசினஸிற்காக வெளியே செல்லவோ தங்களுடைய தனி விமானங்களை பயன்படுத்துகின்றனர்.
இதற்காக அவர்களது வீட்டிற்கு முன்னதாகவே விமானங்களை தரையிறக்க மற்றும் அருகில் உள்ள விமான நிலையத்திற்கு செல்ல வசதியாக 100 அடியில் சாலைகளை அமைத்துள்ளனர்.
இங்கு விமானங்களை இயக்குபவர்கள் பெரும்பாலும் விமானத்தை எப்படி இயக்க வேண்டும் என்று அறிந்து பைலட் லைசன்ஸ் வைத்து இருப்பவர்கள். அத்துடன் இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் விமான ஓட்டுனர்கள் அல்லது ஓய்வு பெற்ற ராணுவ விமானி ஆவர்.
ஒரு சிலர் மட்டுமே மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பிற தொழில் துறைகளை சேர்ந்தவர்கள். இந்த நகரத்தில் வசிப்பவர்கள் அழைப்பு விடுத்தால் மட்டுமே வெளியாட்கள் இந்த நகரத்திற்கு உள்ளே நுழைய அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கேமரூன் ஏர்பார்க் போன்று ப்ளோரிடாவில் ஸ்ப்ரூஸ் க்ரீக் என்ற மற்றொரு ஏர்பார்க் நகரும் அமெரிக்காவில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |