கூடாரத்தில் 12 வயது பேரனுடன் உயிரிழந்து கிடந்த முதியவர்: நிதி திரட்டும் பணி தீவிரம்
மத்திய வேல்ஸில் குடும்பத்தோடு முகாம் பயணத்திற்கு சென்ற 12 வயது சிறுவன் மற்றும் அவரது தாத்தா மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாத்தா - பேரன் உயிரிழப்பு
12 வயதான கைசி பிரவுன்(Kaicy Brown) மற்றும் 66 வயதான டேவிட் பிரவுன் (David Brown) ஆகிய இருவரும் Powys மாவட்டத்தில் உள்ள முகாம் தளத்தில் உள்ள தங்கள் கூடாரத்தில் உயிரற்ற நிலையில் செப்டம்பர் 14ம் திகதி கண்டறியப்பட்டனர்.
மரணத்திற்கு காரணம் கார்பன் மோனாக்சைடு விஷம் என்று சந்தேகிக்கப்படுகிறது, இது சமையல் அடுப்பில் இருந்து வெளியேறியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுயநினைவற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இருவர் குறித்த தகவலுக்கு அவசர சேவை பணியாளர்கள் உடனடியாக பதிலளித்த போதிலும், கைசி மற்றும் டேவிட் ஆகியோரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.
பெர்க்ஷயர் குடும்பத்தின்(Berkshire family) வார இறுதி விடுமுறை பயணத்தின் போது இந்த சம்பவம் நடந்துள்ள நிலையில், பொன்டிப்பிரிட்டில்(Pontypridd) நடைபெற்ற விசாரணைக்கு மத்தியில் மூத்த கள ஆய்வாளர் கிரேம் ஹியூஸ், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
நிதி திரட்டும் பணி தீவிரம்
இந்த சோகமான விபத்தில் தனது மகன் மற்றும் தந்தையை இழந்துள்ள தாயார் ஜெசிகாவை(Jessica) ஆதரிக்க நிதி திரட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நீதி உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கு செலவுகளுக்கும், நினைவு சின்னம் மற்றும் சட்ட கட்டணங்களுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |