குடிக்காதன்னு சொல்லாமல் அளவோடு குடிக்க அட்வைஸ் பண்ணலாம்! கமல் ஹாசன் பேச்சு
கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் கமல் ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
கள்ளச்சாராய மரணம்
தமிழக மாவட்டமான கள்ளக்குறிச்சியில், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் இரவு உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இதில், தற்போது வரை 57 பேர் உயிரிழந்துள்ளனர். 100 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சாராயத்தை விற்ற கன்னுக்குட்டி, விஜயா, தாமோதரன், ஜோசப் ராஜா, முத்து, சின்னத்துரை ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதில் ள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கமல் ஹாசன் ஆறுதல்
இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசன் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சாலை விபத்து ஏற்படுவதால் போக்குவரத்தை நிறுத்த முடியாது. அதேபோல டாஸ்மாக்கை மூடினால் எல்லாம் சரியாகி விடும் என்று நினைப்பது தவறான கருத்து.
டாஸ்மாக்கில் இருந்து வரும் வருமானத்தை எந்த அரசாக இருந்தாலும் அதன் ஒரு பகுதியை வைத்து ஓரளவுக்கு மேல் குடிக்க கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மது குடிப்பவர்களை குடிக்க வேண்டாம், குடிக்காதே என்று சொல்ல முடியாது. அதற்கு பதிலாக அளவோடு குடிக்க அட்வைஸ் பண்ணலாம். மதுபான கடைகளுக்கு அருகே ஆலோசனை மையங்களை ஏற்படுத்த வேண்டும்" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |