பறவைகள் ஏன் முகம் பார்க்கும் கண்ணாடிகள் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளில் மோதுகிறது?
கட்டிட கண்ணாடிகளில், பிரதிபலிக்கும் தன்மையுள்ள மேற்பரப்புகள் கொண்டது (reflective glass) ஒருவகை. இதில் பிரதிபலிக்கும் வானம், தாவரங்கள், மரங்கள் போன்றவை உண்மை என்றே பறவை நம்புகிறது.
'தான் பறந்து செல்லும் பாதையின் தொடர்ச்சி இது' என்று நினைத்து அது நம்பிகையுடன் தொடர்ந்து முன்னேறி செல்லும்.
மோதும் மிக அருகாமையில்தான் தனது பிரதிபலிப்பையும் கண்ணாடியில் பார்க்கும். பயந்து விக்கித்துப் போகும்.
பெரும்பாலும் இந்த மோதலில் பறவை இறந்து விடும். தப்பிப் பிழைத்தவை, மீதி வாழ்நாளில் எதிரில் ஒரு பறவை வந்தாலே நடுங்கிப் போகின்றன.
பறவை மோதலை தடுக்க முடியுமா?
பூச்சித் திரைகளைப் பயன்படுத்தலாம் (insect screens). இந்த திரைகள் கண்ணாடியின் பிரதிபலிப்புகளை கிட்டத்தட்ட அகற்றிவிடும்.
மீறி பறவைகள் தாக்கினால், அந்த தாக்கம் குறைகிறது. இந்த திரைகள் நிறுவ எளிதானது.
இதில் விருப்பமில்லையா? வண்ண டேப் பற்றைகள், அலங்கார சரங்கள், வண்ண கயிறுகள், நெட்டிங் இப்படி உங்கள் மனைவி ஆசையாக உருவாக்கி அலமாரியில் அடைத்து வைத்திருக்கும் கலை பொக்கிஷங்களை பறவைகள் கண்ணில் தெரியும்படி கண்ணாடியில் இணைக்கலாம்: