உடல் எடையை வேகமாக குறைக்க கிராம்பு உதவுமா?
கிராம்பு எளிதில் கிடைக்கும் மசாலாப் பொருள். இதில் மருத்துவ குணங்கள் அதிகளவு நிறைந்துள்ளது.
அதனால் தான், பண்டைய காலங்களில் இருந்து கிராம்பு உணவுப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதில் மாங்கனீசு கிராம்பில் உள்ளது.
இது வைட்டமின் கே, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் மற்றும் குறைந்த அளவு புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இது சுவைக்காக மட்டுமின்றி பல உடல்நல பிரச்சினைகளை குறைக்க உதவுகின்றது. குறிப்பாக உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகின்றது.
அந்தவகையில் கிராம்பு எப்படி உடல் எடையை குறைக்க உதவுகின்றது? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
கிராம்பு எடையை குறைக்க எப்படி உதவுகிறது?
கிராம்பு வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் செரிமானத்தை ஊக்குவிக்கிறது. வளர்சிதை மாற்றம் நேரடியாக எடை இழப்புடன் தொடர்புடையதால் இது உடல் எடையை குறைக்க உதவுகின்றது.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் கிராம்புகளைச் சேர்த்து, உடல் எடை அதிகரிப்பதை கட்டுப்படுத்தலாம்.
தினமும் எடுத்து கொள்ளலாமா ?
ஒருவர் தினமும் சில கிராம்புகளை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். இவற்றை அப்படியே உண்ணலாம் அல்லது சமையலில் பயன்படுத்தி உண்ணலாம்.
பக்கவிளைவு உண்டா?
- கிராம்பு அதிகமாக சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். கிராம்புகளில் உள்ள இரசாயனங்கள் குடல் அமைப்பைப் பாதிக்கும். இது இரைப்பை குடல் அசௌகரியத்திற்கும் வழிவகுக்கும்.
- கிராம்புகளை அதிகமாக உட்கொள்வது தசை வலி மற்றும் சோர்வுக்கு வழிவகுக்கிறது.