அமெரிக்காவின் இலக்குகளை தாக்கி அழிக்க முடியுமா? ஈரானின் ஏவுகணை பலம் குறித்த அலசல்
அமெரிக்காவின் இலக்குகளை ஈரானால் தாக்கி அழிக்க முடியுமா என அதன் ஏவுகணை பலம் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் ஏவுகணை பலம்
ஈரானை தாக்கும் நோக்கில் அமெரிக்கா தனது அதிநவீன போர் கப்பல்களை மத்திய கிழக்கில் உள்ள பாரசீக வளைகுடா பகுதிக்கு அனுப்பியுள்ளது.

அணு ஒப்பந்ததிற்க்கு ஈரான் ஒத்துக்கொள்ளாவிட்டால் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
ஈரானின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும், மத்திய கிழக்கில் பிராந்திய போர் வெடிக்கும் என ஈரான் உச்சத்தலைவர் அலி காமெனி பதிலடி கொடுத்துள்ளார்.

ஈரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கு ராணுவ பலம் கொண்டிருந்தாலும், வல்லரசு நாடான அமெரிக்கா உடன் முழு போரினை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற 12 நாள் போர், ஈரானில் உள்ள அணு சக்தி மையங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசியதையடுத்து முடிவுக்கு வந்தது.
தற்போது அமெரிக்கா மீண்டும் ஈரானில் தாக்குதல் நடத்தினால், ஈரானில் உள்ள எந்த இலக்குகளை குறி வைத்து அமெரிக்கா தாக்குதலை மேற்கொள்ளும், ஈரானின் உச்சந்தலைவர் கொல்லப்பட்டால் என்ன நிகழும், ஈரானால் அமெரிக்காவிற்கு எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்த முடியும், இஸ்ரேல் உடனான போரில் ஈரான் எப்படி செயல்பட்டது, ஈரானின் ஏவுகணைகள் பலம் என்ன என இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்வில் நீரஜ் டேவிட் விளக்கியுள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |