படித்து பட்டம் வாங்காமல் பஞ்சர் கடை கூட வைக்கலாம்.. பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு
படித்து பட்டம் வாங்குவதில் பயனில்லை என்றும், பஞ்சர் கடை கூட வைக்கலாம் என்று பாஜக எம்எல்ஏ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக எம்எல்ஏ பேச்சு
இந்தியாவில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக பிரதமர் சிறப்பு கல்லூரி என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில் 55 மாவட்டங்களில் இந்த புதிய கல்லூரிகளை உள்துறை அமைச்சர் அமித் ஷா காணொளி மூலம் கடந்த 14 -ம் திகதி திறந்து வைத்தார்.
அதேபோல குணா மாவட்டத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அந்த தொகுதி எம்எல்ஏ பன்னாலால் சாக்யா கலந்து கொண்டார். இவர் அப்போது நிகழ்ச்சியில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் அந்த நிகழ்ச்சியில் பேசுகையில், "இங்கு பிரதமர் சிறப்பு கல்லூரியை தொடங்கியுள்ளோம். மாணவர்கள் நீங்கள் ஒன்றை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
இங்கு நீங்கள் கல்லூரியில் பெறும் பட்டத்தால் பயனில்லை. இதற்கு பதிலாக மோட்டார் சைக்கிளுக்கு பஞ்சர் பார்க்கும் கடை வைத்தால் வாழ்க்கையை நடத்தலாம்" என்றார். இவர் பேசியது மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |