இவர் பவுலிங்க அடிச்சு நொறுக்குங்க! சொதப்பும் இங்கிலாந்தின் மீது ஆதங்கத்தை கொட்டிய பீட்டர்சன்
இங்கிலாந்து அணியின் முன்னாள் அதிரடி வீரரான கெவின் பீட்டர்சன், அவுஸ்திரேலியா வீரர் நாதன் லயன் பந்து வீச்சை அடித்து ஆடும் கூறியிருப்பது, சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இங்கிலாந்து-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, அடிலெய்டில் கடந்த 16-ஆம் திகதி துவங்கியது.
19-ஆம் திகதியான நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 82 ஓட்டங்கள் எடுத்து தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.
Can SOMEONE please smack Lyon?!?!! FFS!
— Kevin Pietersen? (@KP24) December 18, 2021
Off spinner with zero variations and bowling on world crickets flattest road!!!! #Ashes
இந்நிலையில், இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான பீட்டர்சன், யாராவது ஒருவர் நாதன் லயன் பந்தை அடித்து ஆடுங்கள். அவர், எந்த ஒரு வேரியேஷனும் இல்லாமல் பிளாட் பிட்ச்களில் கூட சிறப்பாக பந்து வீசி வருகிறார்.
அவரது பந்தை யாராவது அடியுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த டுவிட்டர் பதிவு தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்த இரண்டாவது போட்டியின், முதல் இன்னிங்ஸில் நாதன் லயன் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.