என்ன Whatsapp பணம் அனுப்பமுடியுமா? எப்படி செய்யலாம்?
Whatsapp எனப்படுவது வேகமாக குறுஞ்செய்திகளை பரிமாற்றிக்கொள்ளும் ஒரு ஆப் ஆகும்.
அதிலே தற்போது பணம் அனுப்பும் வசதியும் வந்துள்ளது.
இந்த வசதி கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆகிய இரண்டிலுமே அணுக கிடைக்கிறது.
எப்படி அனுப்புவது?
முதலில் WhatsApp திறந்து More options என்பதை கிளிக் செய்து Settings உள்ளே சென்று choose Payments options கிளிக் செய்யவும்.
அதன் பின் Add new account சென்று WhatsApp Pay விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கவும். கிடைக்கும் வங்கிகளின் பட்டியலிலிருந்து உங்கள் வங்கியின் பெயரைக் கண்டுபிடித்து தட்டவும். அதன்பின் Verify via SMS சென்று உங்கள் கணக்கைச் சரிபார்க்க அனுமதிக்கவும்.
இறுதியாக WhatsApp உடன் நீங்கள் பயன்படுத்த விரும்பும் வங்கிக் கணக்கைத் தேர்வு செய்யவும் Done கொடுக்கவும்.
WhatsApp மூலம் பணம் செலுத்த, உங்கள் சாதனத்தில் ஆப்ஸின் சமீபத்திய பதிப்பைப் பதிவிறக்கியிருக்க வேண்டும்.
பின்னர் Payments Interface ஐ ஆதரிக்கும் வங்கிகளுக்கு இந்த சேவை கிடைக்கிறது. இதன் மூலம் WhatsApp மூலம் பணத்தை அனுப்ப முடியும்.
ஆண்ட்ராய்டு History பார்ப்பது மற்றும் Bank Balance
உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப்பை திறந்து, ஸ்க்ரீனின் மேல் வலது மூலையில் உள்ள Three-dot Menu பட்டனை கிளிக் செய்யவும்.
பின்னர் மெனுவிலிருந்து Payment என்கிற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
பின்னர் History என்பதன் கீழ் உங்கள் முந்தைய பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான அனைத்துவிவரங்களையும் பார்க்கலாம்.
Bank Balance
நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள் போனில் உள்ள வாட்ஸ்அப்பை திறந்து More என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
Settings சென்று Payments என்பதை கிளிக் செய்து Payment methods என்பதை கிளிக் செய்து உங்கள் Bank Account கிளிக் செய்து
View Account Balance என்பதை கிளிக் செய்யவும்.
கடைசியாக உங்கள் PIN நம்பரை உள்ளிட்டு உங்கள் Bank Balance செக் செய்யவும்.
ஐபோனில் History பார்ப்பது மற்றும் Bank Balance
ஐபோனில் என்றால் வாட்ஸ்அப்பை திறந்து Settings டேப்பிற்கு செல்லவும். பின்னர் Payments என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
அதை தொடர்ந்து Payment History கிளிக் செய்யவும். இப்போது உங்களுடைய பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் பார்க்க முடியும்.
Bank Balance
Settings விருப்பத்தை கிளிக் செய்யவும். பின்னர் Payments என்பதை கிளிக் செய்யவும்.
பின்னர் Payment methods என்பதை கிளிக் செய்து உங்கள் Bank Account கிளிக் செய்யவும்.
இப்போது View Account Balance என்பதை கிளிக் செய்யவும்.
கடைசியாக உங்கள் PIN நம்பரை உள்ளிட்டு உங்கள் Bank Balance செக் செய்யவும்.