பெண்களின் மாதவிடாய் வலியை போக்க இந்த ஆசனத்தை செய்து வந்தாலே போதும்!
மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி என்பது பெண்களுக்குத் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
அதேசமயம் தலைவலி, வாந்தி, கால்வலி, குறிப்பாக அடி வயிற்று வலி போன்றவை அவர்களை எந்தவித வேலையும் செய்ய முடியாத அளவிற்கு வாட்டும்.
சில வலி நிவாரணி மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் அது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என பல ஆய்வுகளில் கூறப்படுகின்றன. இருப்பினும் ஒரு சில யோகப்பயிற்சிகள் மாதவிடாய் வலியை குறைக்க உதவி புரிகின்றன.
அப்படிப்பட்ட ஒரு யோகசானம் ஒன்றை பற்றி தற்போது எப்படி செய்யலாம் என்பதை பார்க்கப்போகின்றோம்.
செய்முறை
[
தண்டாசனத்தில் உட்காரவும். இரு முழங்கால்களையும் மடக்கி, உள்ளங்கால்களை ஒன்றாக சேர்த்து இரு குதிகால்களையும் குத, குய்யத்தின் மத்தியில் படும்படி வைக்கவும். கை விரல்களை ஒன்றாகச் கோர்த்து உள்ளங்கைகளை சற்று பாதங்களுக்கு அடியில் நகர்த்தி கை விரல்களால் பாதங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு நேராக நிமிரவும்.
முதுகு, கழுத்து, தலை ஒரே நேர்க்கோட்டில் இருக்கட்டும். இந்த நிலையில் சில முறை மூச்சை இழுத்துவிடவும்.
மூச்சை வெளியேவிட்டபடி முன்னுக்கு குனிந்து தலையை தரையை நோக்கி கொண்டு வந்து, தாடை தரையை தொடும்படி வைக்கவும்.
இந்த ஆசன நிலையில் 30 வினாடி முதல் ஒரு நிமிடம் வரை சாதாரண மூச்சுடன் நிலைத்திருக்கவும். பிறகு மூச்சை உள்ளுக்கு இழுத்து நேராக நிமிர்ந்து ஆரம்ப நிலைக்கு வரவும். இந்த ஆசனத்தை 2 முதல் 4 முறை பயிற்சி செய்யலாம்.
குறிப்பு
-
சிலருக்கு இப்பயிற்சியில் உள்ளங்கால்களை ஒன்றாக சேர்த்து வைக்கும்போது கால்கள் இரண்டும் தரையில் படியாமல் மேலே தூக்கிக்கொண்டு நிற்கும்.
-
அத்தகையவர்கள் கால்களை மேலும் கீழுமாக ஏற்றி இறக்கி 10 முதல் 15 முறை காலை, மாலை செய்து வந்தால் சில நாட்களில் கால்கள் தரையில் படிந்து விடும்.
- கால்கள் இரண்டும் தரையில் படிந்த பிறகு நிதானமாக முன்குனிந்து எவ்வளவு வளையமுடியுமோ அந்த அளவுக்கு வளைந்து அதே நிலையில் பயிற்சி செய்யவும். நாள் படப்பட வளையும் தன்மை அதிகாத்து தாடையால் தரையை தொடும் நிலை கைகூடும்.
பயன்கள்
-
விரைவாதத்திற்கு பயனுள்ளது. மலட்டுத்தனம் நீங்கும். ஆண், பெண் பிறப்புறுப்புகளின் குறைபாடுகளை நீக்கி, வலுப்படுத்துகிறது.
- சிறுநீரகத்தின் செயல்பாடு நன்றாக அமையும்.
சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை குறைபாடுகள் நீங்கும்.
- பெண்களுக்கு மிகவும் பயனுள்ள ஆசனம் இது.
மாதவிடாயின் போது ஏற்படும் இடுப்புவலியையும் வயிற்று வலியையும், அதிக இரத்தப்போக்கையும் கட்டுப்படுத்துகிறது.