ஒரே வாரத்துல 5 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா? இந்த ஜூஸை எடுத்துகோங்க போதும்!
முட்டைகோஸ் போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் நம்முடைய உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதனால் இதனை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
இதில் கலோரி அளவு மிகக் குறைவு. அதேசமயம் கரையும் மற்றும் கரையா நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கின்றது.
குறிப்பாக தொப்பை, ஊளைச்சதை மற்றும் உடல் பருமனால் அவதிப்படுகிறவர்களுக்கு உடல் எடையையும் கொலஸ்டிராலையும் குறைப்பதற்கு முட்டைக்கோஸ் மிகச்சிறந்த தேர்வாக இது இருக்கின்றது.
இதனை ஜூஸ் வடிவில் எடுத்து கொள்வது இன்னும் நன்மையே தரும். தற்போது இதனை எப்படி எடுத்து கொள்ளலாம்.
image - ndtv
தேவையானவை
- நறுக்கிய முட்டைகோஸ் - அரை கப்
- ஆப்பிள் (அ) விரும்பிய பழம் - பாதி அளவு,
- எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
- இஞ்சி - ஒரு இன்ச் அளவு
- புதினா இலைகள் - 5
செய்முறை
முதலில் முட்டைகோஸை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். நறுக்கிய முட்டைகோஸை வெந்நீரில் போட்டு பத்து நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க விடுங்கள்.
பின்னர் சிறிது நேரம் ஆறவிட்டு, முட்டைகோஸை மிக்ஸியில் போட்டு அதனுடன் ஆப்பிள் அல்லது வேறு ஏதாவது ஒரு பழம், துருவிய இஞ்சி, புதினா இலைகளைச் சேர்த்து சிறிது தண்ணீரும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
அரைத்த முட்டைகோஸை வடிகட்டி ஒரு கிளாஸில் ஊற்றுங்கள். அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்தால் சூப்பரான முட்டைகோஸ் ஜூஸ் ரெடி. இந்த ஜூஸை காலை வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது.