அயர்லாந்தின் மிரட்டல் பந்துவீச்சில் சரிந்த விக்கெட்டுகள்..138 ரன் இலக்கு நிர்ணயித்த கனடா
டி20 உலகக்கிண்ணப் போட்டியில் கனடா அணி 138 ஓட்டங்கள் வெற்றி இலக்கை அயர்லாந்துக்கு நிர்ணயித்துள்ளது.
நியூயார்க்கில் அயர்லாந்து மற்றும் கனடா அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி கனடா முதலில் துடுப்பாடியது.
நவ்நீத் தலிவால் 6 ஓட்டங்களில் அடைர் பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்து ஆரோன் ஜான்சன் 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
Ireland take four wickets at the 15-over mark as Canada look to accelerate in the death overs ?#T20WorldCup | #CANvIRE | ?: https://t.co/cgPIceU0TH pic.twitter.com/D5AqZO3kpB
— ICC (@ICC) June 7, 2024
பின்னர் களமிறங்கிய பர்கட் சிங் 18 ஓட்டங்களிலும், தில்ப்ரீத் 7 ஓட்டங்களிலும் அவுட் ஆக கனடா அணி தடுமாறியது. எனினும் நிக்கோலஸ் கிர்டோன், ஷ்ரேயாஸ் மொவ்வா கூட்டணி கவுரவமான ஸ்கோரை எட்ட உதவியது.
20 ஓவர்கள் முழுமையாக ஆடிய கனடா 7 விக்கெட் இழப்பிற்கு 137 ஓட்டங்கள் எடுத்தது. கிர்டோன் 35 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 49 ஓட்டங்கள் எடுத்தார்.
ஷ்ரேயாஸ் மொவ்வா 36 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 37 ஓட்டங்கள் எடுத்தார். யங், மெக்கர்த்தி தலா 2 விக்கெட்டுகளும், டெலனி மற்றும் அடைர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
New York ?
— ICC (@ICC) June 7, 2024
Mark Adair and Craig Young take a wicket each as Canada score 37/2 in the Powerplay.#T20WorldCup | #CANvIRE | ?: https://t.co/fWgVe5Fo9a pic.twitter.com/QxYTBoIMEL
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |