மிரட்டி பணம் பறித்த வழக்கில் கனடாவில் 6 இந்தியர்கள் கைது
கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை நடத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவார். இது தவிர ஏழாவது நபரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 25 அன்று, ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறை எட்மண்டனில் ஆறு இடங்களில் சோதனை செய்து அவர்களைக் கைது செய்தது. இதில் 100க்கும் மேற்பட்ட பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மனிந்தர் சிங் தலிவால் (34), ஜஷந்தீப் கவுர் (19), குர்கரன் சிங் (19), மானவ் ஹீர் (19), பர்மிந்தர் சிங் (21) மற்றும் திவானூர் அஷ்ட் (19) மற்றும் 17 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆசிய வர்த்தகர்களை குறிவைத்து இவர்கள் தங்கள் மோசடியை நடத்தி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் அனைவரும் பஞ்சாபை சேர்ந்தவர்கள் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த குழுவின் தலைவரான மனிந்தர் சிங் தலிவால் என்பவர் தலைமறைவாக இருப்பதாகவும், அக்டோபர் முதல் நகரத்தில் 40 மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Canada Indian origin arrest, 6 Indians Arrested In Canada