தவறான ஒரு முடிவு... அமெரிக்க அதிகாரிகளிடம் சிக்கிய கனடா புகலிடக் கோரிக்கையாளர்
கனடாவில் வசிக்கும் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர், தவறுதலாக எல்லையைத் தாண்டிய நிலையில் தற்போது அமெரிக்க குடியேற்ற தடுப்பு அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்ட தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் நுழைந்த
இந்த விவகாரத்தில், குறித்த நபரை மீட்க கனடா நிர்வாகம் உதவ மறுப்பதாக அவரது சட்டத்தரணி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு வங்கதேசத்திலிருந்து கனடா வந்த 28 வயதான மஹின் ஷாஹ்ரியர், புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளார்.
இந்த நிலையில், நண்பர் ஒருவரின் அழைப்பை ஏற்று மாண்ட்ரீலுக்கு அருகில் குடியிருப்பு ஒன்றிற்கு சென்றுள்ளார். அந்த குடியிருப்பானது ஒரு கிராமப்புறத்தில் இருந்தது என்றும், அதைக் கண்டுபிடிக்க முடியாததால், அவர் நண்பரை அழைத்து வழி கேட்டதாகவும் கூறியுள்ளார்.
அதன் பின்னரே தாம் அமெரிக்காவில் நுழைந்துள்ளதாக தெரிய வந்தது என்றும், அது தன்னுடைய நோக்கமல்ல என்றும் ஷாஹ்ரியர் தெரிவித்துள்ளார். இதனிடையே குடியேற்ற தடுப்பு அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் புதிய சிக்கலாக அமெரிக்காவின் Ice அதிகாரிகள் தரப்பு கனடாவிற்கு மக்களை திருப்பி அனுப்பும் முயற்சிகளைத் தடுத்துள்ளனர். ஷாஹ்ரியர் சட்டத்தரணி தெரிவிக்கையில், CBSA எனப்படும் கனடா எல்லை சேவைகள் முகமையே தனது வாடிக்கையாளர் விவகாரத்தில் தலையிட மறுக்கிறது என்றார்.
பாதுகாப்பான மூன்றாம் நாடு
மேலும், பாதுகாப்பான மூன்றாம் நாடு ஒப்பந்தத்தின் கீழ், கனடா ஷாஹ்ரியரை மீட்க வேண்டும், ஏனெனில் அவர் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 14 நாட்களுக்குள் எல்லை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
மட்டுமின்றி, கனடாவில் உங்களுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்துடன் கூடிய குடும்ப உறுப்பினர் அல்லது அகதி அந்தஸ்து கோரிக்கையாளர் ஒருவர் இருந்தால், தவறுதலாக எல்லைத் தாண்டியிருந்தாலும் நீங்கள் திரும்பி வர உரிமை உண்டு.
தற்போது இந்த விவகாரத்தில், ஷாஹ்ரியரின் சட்டத்தரணி நீதிமன்றத்தை நாடியுள்ளார். மட்டுமின்றி, இந்த விவகாரத்தில் உதவ கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரியிடமும் அவர் மனு அளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |