லெபனானில் இருந்து கனடா குடிமக்களை மீட்க தீவிர நடவடிக்கை
லெபனானின் தலைநகரமான பெய்ரூட்டில் இஸ்ரேல் குண்டுவீசக்கூடும் என்கிற ஏற்பட்ட அச்சத்தில் இருந்து கனடா அதன் குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கனடாவின் வெளிநாட்டு விவகார அமைச்சர் மெலனி ஜோலி, வெள்ளிக்கிழமை இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டார்.
கனடாவில் ரூ.60 லட்சம் சம்பளம் பெறும் இந்திய தொழில்நுட்ப நிபுணர்., அறை வாடகை ரூ.1 லட்சம் செலுத்தும் நிலை
கனடா, தற்காலிகமாக கிடைக்கும் வரையறுக்கப்பட்ட வணிக விமானங்களில் அதன் குடிமக்களுக்கு இருக்கைகள் ஒதுக்கியுள்ளது," என்று ஜோலி தனது சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்தார்.
"ஒரு இருக்கை கிடைத்தால், தயவுசெய்து அதை பயன்படுத்திக்கொள்ளுங்கள்" என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த வாரம், இசுரேல் குண்டுவீச்சு தாக்குதல்களில் லெபனானில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது லெபனானில் மேலும் பாரிய அளவிலான அழிவுகளை உருவாக்கக்கூடிய யுத்தத்தை ஏற்படுத்தும் என அச்சம் அதிகரித்துள்ளது.
ஜோலி, லெபனானில் உள்ள கனேடிய குடிமக்களை, அவர்கள் உதவிக்காக பெய்ரூட்டில் உள்ள கனடா தூதரகத்தில் தங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
அதே நேரத்தில், மீட்பு நடவடிக்கைகளுக்காக நிதியுதவிக்கு தேவைப்படும் குடிமக்களுக்கு கடன் வசதிகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Canada booking seats on commercial flights to help citizens flee Lebanon