டிரம்ப் திட்டம் இனி பலிகாது...!லிபரல் கட்சி வெற்றியை தொடர்ந்து மார்க் கார்னி உறுதி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் திட்டங்கலை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என தேர்தல் வெற்றி உறுதியானதை அடுத்து லிபரல் கட்சி தலைவர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஆட்சியமைக்கும் லிபரல் கட்சி
கனடா பொதுத் தேர்தல் 2025-ல் மார்க் கார்னியின் லிபரல் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.// இது கனடா அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது.
தேர்தல் கணிப்புகளின்படி, 343 உறுப்பினர்களை கொண்ட கனடா நாடாளுமன்றத்தில் லிபரல் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
எனினும், தனிப்பெரும்பான்மை கிடைக்குமா என்பது இன்னும் கேள்விக்குறியாக உள்ளது. ஆட்சி அமைக்கவும் சட்டங்களை நிறைவேற்றவும் சிறிய கட்சிகளின் ஆதரவு தேவைப்படலாம்.
இந்த தேர்தலில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய இணைப்பு பேச்சு மற்றும் அமெரிக்கா-கனடா வர்த்தக போர் ஆகியவை முக்கிய தேர்தல் பிரச்சாரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டொனால்ட் டிரம்புக்கு பதிலடி
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, லிபரல் கட்சியின் தலைவர் மார்க் கார்னி அமெரிக்காவின் சமீபத்திய நிலைப்பாடுகள் குறித்து ஆவேசமாக பேசினார்.
அதில், "அமெரிக்காவின் ஆதிக்கத்திற்காக கனடாவை உடைக்க அதிபர் டிரம்ப் முயற்சிக்கிறார். இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். கனடாவின் நலனுக்காக அனைத்து வழிகளிலும் போராடுவோம்" என்று உறுதியளித்தார்.
இந்த தேர்தல் முடிவு கனடா அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு அழுத்தங்களுக்கு கனடா மக்கள் எவ்வாறு பதிலளிப்பார்கள் என்பதை இது காட்டுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |