தெற்கு லெபனானில் கனேடியர் குடியிருப்பு: ஆயுதங்களை கைவிட கனடா அழைப்பு
தெற்கு லெபனானில் கனேடிய குடிமகன் ஒருவர் உயிரிழந்து இருப்பதைக் கனடா அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
லெபனான் நீடிக்கும் சண்டை
லெபனானில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா படையினருக்கும் இஸ்ரேலிய இராணுவ படையினருக்கும் இடையே சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திங்கட்கிழமை தெற்கு லெபனான் பகுதியில் கனேடியர் ஒருவர் உயிரிழந்து இருப்பதைக் கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த உறுதிப்படுத்தியுள்ளார்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள அனிதா ஆனந்த், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை வழங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், லெபனானில் உயிரிழந்த கனேடியர் யார், அவர் உயிரிழந்ததற்கான காரணம் குறித்த எந்தவொரு தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.
ஆயுதங்களை கைவிட கோரிக்கை
மேலும் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு லெபனானில் நீடித்து வரும் பதற்றமான சூழ்நிலையில் அமைச்சர் அனிதா ஆனந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை கைவிடுவது மற்றும் லெபனான் தனது அதிகாரத்தை மற்றும் இறையாண்மையை எல்லைக்குள் நிலைநாட்ட வேண்டும் என்பதில் கனடா உறுதியாக இருப்பதாக வெளிப்படுத்தினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |