அயர்லாந்துக்கு அதிர்ச்சி தோல்வியை பரிசளித்த கனடா! டி20 உலகக்கிண்ணத்தில் முதல் வெற்றி
நியூயார்க்கில் நடந்த டி20 உலகக்கிண்ணப் போட்டியில், கனடா அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி சாதனை படைத்தது.
அடுத்தடுத்து விக்கெட்டுகள்
அயர்லாந்து மற்றும் கனடா அணிகளுக்கு இடையிலான போட்டி நியூயார்க்கில் நடந்தது. முதலில் ஆடிய கனடா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 137 ஓட்டங்கள் எடுத்தது.
நிக்கோலஸ் கிர்டோன் 49 ஓட்டங்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய அயர்லாந்து அணியில் பால் ஸ்டிர்லிங் 9 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
அதனைத் தொடர்ந்து பால்பிரினி (17), டக்கர் (10), டெக்டர் (7) மற்றும் கேம்பர் (4) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
பந்துவீச்சில் நெருக்கடி
எனினும் ஜார்ஜ் டாக்ரெல், மார்க் அடைர் வெற்றிக்காக போராடினர். ஆனாலும் கனடாவின் கார்டன், ஹெய்லிஜர் பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்தனர்.
மார்க் அடைர் 34 (24) ஓட்டங்களில் இருந்தபோது கார்டன் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
பின்னர் அயர்லாந்து வெற்றிக்கு 4 பந்தில் 17 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த அணியால் 125 ஓட்டங்களே எடுக்க முடிந்ததால், கனடா அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் வெற்றி
இது உலகக்கிண்ணத் தொடரில் கனடாவின் முதல் வெற்றி ஆகும். அத்துடன் குறைந்த ஸ்கோரில் எதிரணியை Defend செய்த மூன்றாவது அணி என்ற சாதனையையும் கனடா படைத்தது.
இதற்கு முன்பு டி20 உலகக்கிண்ண போட்டிகளில் ஆப்கானிஸ்தான் 124 இலக்கினை வைத்து மேற்கிந்திய தீவுகளையும், நெதர்லாந்து 134 இலக்கினை வைத்து இங்கிலாந்தையும் வீழ்த்தின.
Scenes in New York! ?
— ICC (@ICC) June 7, 2024
Ireland are 74/6 at the 15-over mark courtesy of a brilliant bowling display from Canada ?#T20WorldCup | #CANvIRE | ?: https://t.co/ElskSM9xIL pic.twitter.com/qqEUci66DZ
On cloud nine making ?? proud ❤️#CANvIRE #weCANcricket #T20WorldCup@icc @t20worldcup
— Cricket Canada (@canadiancricket) June 7, 2024
? ICC/Getty pic.twitter.com/NQ3G4q2nuW
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |