கனடா- இந்தியா மோதல் போக்கு... மசூர் பருப்பு பற்றாக்குறை? வெளிவரும் விரிவான பின்னணி
இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி ஒருவர் கனேடிய மண்ணில் கொல்லப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இந்தியாவில் மசூர் பருப்பு பற்றாக்குறை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வணிக ரீதியாக பாதிப்பு
கனடாவில் குடியேறிய, இந்திய அரசாங்கத்தால் தேடப்படும் குற்றவாளி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் மர்ம நபர்களால் கொல்லப்பட்ட விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையே இராஜாங்க ரீதியான சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தொடர்புடைய விவகாரம் வணிக ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக கவலை எழுந்துள்ளது. ஆனால் இந்திய அரசாங்கம் அப்படியான ஒரு நெருக்கடியை எதிர்கொள்ள தயாராகவே இருப்பதாக கூறப்படுகிறது.
காலிஸ்தான் பிரிவினைவாதிகள் பலர் கனடாவில் இருந்து இயங்கி வருவது, இந்தியாவுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தி வந்தது. மேலும், இந்த விவகாரம் தற்போது ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையுடன் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில்,
இது இந்தியாவில் மசூர் பருப்பு (சிவப்பு பருப்பு) பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்று பல நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், பருப்பு வகைகளின் இறக்குமதிக்கு இந்தியா பெரும்பாலும் கனடாவையே நம்பியுள்ளது.
இந்தியா நடவடிக்கை
இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ தரவுகளின்படி, 2022 மற்றும் 2023ல் கனடாவில் இருந்து ரூ.3,012 கோடி மதிப்பிலான 4.85 லட்சம் டன் பருப்பை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
@ap
மேலும், இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் ஒரு லட்சம் டன் மசூர் பருப்பு கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கனடாவுடன் தற்போதைய இறுக்கமான சூழல் காரணமாக இந்தியாவில் பருப்பு வகைகளின் பற்றாக்குறை ஏற்படாதவாறு இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளதாகவே கூறுகின்றனர்.
மேலும், கனடாவில் இருந்து பருப்பு வகைகளுக்கு இறக்குமதி சிக்கல் ஏற்பட்டால், அவுஸ்திரேலியா மற்றும் ரஷ்யாவில் இருந்து செய்யப்படும் இறக்குமதியின் அளவை அதிகரிக்க செய்யவும் இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |