கனடாவின் சுற்றுலா விசா திட்டத்தில் செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்
கனடா தற்போது அதன் சுற்றுலா விசா கொள்கையில் முக்கிய மாற்றங்களை செய்துள்ளது.
10 ஆண்டுகள் செல்லக்கூடிய பல முறை நுழைவு விசாக்களை (10-Year Multiple-Entry Tourist Visas) வழங்குவதை நிறுத்தி, தேவையனுமான விண்ணப்பங்கள் மட்டும் பரிசீலிக்கப்படும் என கொள்கையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது, குடியுரிமை அதிகாரிகளுக்கு ஒவ்வொரு விசா விண்ணப்பத்தையும் தனித்தனியாக மதிப்பீடு செய்ய கூடுதல் சுதந்திரம் உள்ளது.
இதனால், சுற்றுலா பயணிகள் குறுகிய கால விசாக்களை பெற நேரிடலாம், இது கனடாவின் குடியேற்ற அளவுகளை கண்காணித்து, இருப்பிடம் பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வை சமாளிக்கும் வகையில் எடுக்கப்பட்டுக்ள நடவடிக்கை ஆகும்.
முந்தைய கொள்கையில், கனடா விசா பெற்றவர்கள் தானாகவே 10 ஆண்டுகள் செல்லக்கூடிய பல முறை நுழைவு விசா பெற வாய்ப்பு இருந்தது. இதனால் அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.
ஆனால், இப்போது, அதிகாரிகள் ஒருமுறை அல்லது பல முறை நுழைவு விசாவை வழங்குவது மற்றும் அதன் செல்லுபடியாகும் காலத்தை தீர்மானிக்க முடியும்.
இதற்கிடையில், கனடா நாட்டு குடியேற்ற அளவுகளை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்த புதிய மாற்றங்கள் கனடாவின் ஆட்கள் வசிக்கும் இடங்கள், விலைவாசி மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சினைகளை சமாளிக்க உதவுகின்றன.
அதன்படி, நிரந்தர குடியிருப்பு இலக்குகளை குறைக்கவும், சர்வதேச மாணவர்களுக்கு வரம்புகளை விதிக்கவும், குறைந்த ஊதிய வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கண்டிப்புகளை விதிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் கனடாவின் புதிய குடியேற்ற உத்தியோகபூர்வ மாற்றத்தை பிரதிபலிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Canada Ends 10-Year Multiple-Entry Tourist Visas