கனடா தேர்தலில் ட்ரூடோ தோல்வி அடைவார்., எலான் மஸ்க் கணிப்பு
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தோல்வி அடைவார் என்று அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் கணித்துள்ளார்.
சமூக ஊடகமான X-ல், ஜேர்மனியில் கூட்டணி அரசாங்கம் வீழ்ச்சி அடைந்ததையடுத்து, ட்ரூடோவை அகற்ற கனடாவிற்கு எலான் மஸ்க்கின் உதவி தேவை என்று பயனர் ஒருவர் பதிவிட்டார்.
இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், கனடாவில் நடைபெறும் அடுத்த தேர்தலில் ட்ரூடோவே தோல்வியடைவார் என்று கூறியுள்ளார்.
ஜேர்மன் அரசாங்கத்தின் வீழ்ச்சி குறித்து சேன்சலர் ஷோல்ஸை கேலி செய்த மஸ்க், அவரை ஒரு "முட்டாள்" என்று கூறியுள்ளார்.
ஜேர்மனியின் சான்சிலர் அவரது நிதி அமைச்சர் கிறிஸ்டியான் லிண்ட்னரை பதவி நீக்கம் செய்துள்ளார்.
லிண்ட்னர் ஷொல்ஸ் அரசாங்கத்தை ஆதரித்து வந்த சுதந்திர ஜனநாயகக் கட்சியின் (FDP) தலைவராவார். FDP கட்சி கூட்டணியை விட்டு வெளியேறியுள்ள நிலையில், ஷொல்ஸ் தலைமையிலான அரசாங்கம் சிறுபான்மையாக குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ட்ரூடோ சிறுபான்மை அரசாங்கத்தை நடத்துவதால் கனடாவில் 2025-இல் தேர்தல்கள் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜஸ்டின் ட்ரூடோ 2015 முதல் ஆட்சியில் உள்ளார். 2019 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில், ட்ரூடோவின் கட்சியால் பெரும்பான்மையை வெல்ல முடியவில்லை, அவர் மற்ற கட்சியின் ஆதரவுடன் அரசாங்கத்தில் இருக்கிறார். செப்டம்பரில், ஜக்மீத் சிங்கின் என்.டி.பி கட்சி அவருக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது. அப்போதிருந்து, ட்ரூடோ ஒரு சிறுபான்மை அரசாங்கத்தை நடத்தி வருகிறார்.
கனடாவில் அடுத்த தேர்தல் 2025 அக்டோபரில் நடைபெறலாம். ட்ரூடோவின் லிபரல் கட்சி கன்சர்வேடிவ் கட்சி, புதிய ஜனநாயக கட்சி, பிளாக் கியூப் காயின் மற்றும் பசுமை கட்சி ஆகியவற்றை எதிர்கொள்கிறது.
BBC அறிக்கையின்படி, கடந்த சில ஆண்டுகளில், பணவீக்கம், வீட்டுவசதி தொடர்பான பிரச்சினைகள் காரணமாக கனடாவில் மக்கள் மத்தியில் ஏமாற்றம் அதிகரித்துள்ளது. இது தேர்தல் கருத்துக்கணிப்பிலும் எதிரொலித்துள்ளது. ட்ரூடோவின் லிபரல் கட்சியின் செல்வாக்கு படிப்படியாக சரிந்து வருகிறது.
ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கத்தின் செயல்பாடு கனேடியர்களை கோபமடையச் செய்துள்ளது. 10 கனேடியர்களில் 7 பேர் (68%) அதிருப்தி அடைந்துள்ளனர், அதே நேரத்தில் 27% பேர் மட்டுமே அரசாங்கத்தின் செயல்திறனில் திருப்தி அடைவதாகக் கூறுகின்றனர். 5% மக்கள் மட்டுமே ட்ரூடோ அரசாங்கத்தில் மிகவும் திருப்தி அடைவதாகக் கூறியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Elon Musk Prediction For Justin Trudeau's Political Future, Canada president election, Canada Justin Trudeau, Germany, Olaf Scholz