இந்திய பயணிகள் மீதான கூடுதல் பரிசோதனை விதிகளை நிறுத்திய கனடா
கனடா, இந்திய பயணிகளுக்கான கூடுதல் பாதுகாப்பு பரிசோதனை நடைமுறைகளை நிறுத்தியுள்ளதாக CBC செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
கனடாவின் போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த், இந்த கூடுதல் பரிசோதனை நடவடிக்கைகள் தற்போது நீக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.
இதற்கு முன்பு, “எச்சரிக்கையாகவே இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன,” என அவர் கூறியிருந்தார்.
கடந்த நவம்பர் 20-ஆம் திகதி, இந்தியாவுக்கு பயணம் செய்யும் பயணிகளுக்கான பாதுகாப்பு பரிசோதனை அதிகரிக்கப்பட்டது. இதனால் பயணிகள் தாமதங்களை சந்திக்க நேரிடும் என முன்னறிவிப்பும் வெளியிடப்பட்டது.
இந்த நடவடிக்கைகள், அக்டோபர் மாதத்தில் Air India விமானத்தில் ஏற்பட்ட வெடிகுண்டு மிரட்டலுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டது.
மிரட்டலுக்கு உள்ளான விமானம் கனடாவின் இக்வாலிட் நகரில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டது. பரிசோதனைக்குப் பிறகு, எந்தவித வெடிகுண்டும் கண்டறியப்படவில்லை.
இந்தியாவுடனான கனடாவின் தொடர்பு, கடந்த சில மாதங்களில் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, கலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலை விவகாரம் தொடர்பாக, கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்திய அரசை குற்றம்சாட்டியதிலிருந்து இவை தீவிரமடைந்தது.
இந்திய வெளியுறவுத்துறை, ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை என மறுத்தது மற்றும் கனடாவில் இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு இடமளிக்கப்படுவதாக கூறியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India Canada Rewlations, Canada removes extra screening for passengers travelling to India