36 ஆண்டுகளுக்கு பின் FIFA உலகக்கோப்பையில் களமிறங்கிய கனடா! தோல்வியிலும் நெகிழ்ச்சியடைந்த கனேடியர்கள்
கத்தார் உலகக்கோப்பையில் தோல்வியடைந்தாலும் தங்கள் அணி விளையாடுவதை பார்த்ததே பெருமையாக இருந்ததாக கனடா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது உலகக்கோப்பை தொடர்
கனடா கால்பந்து அணி கடந்த 1986ஆம் ஆண்டு FIFA உலகக்கோப்பை தொடரில் முதல் முறையாக விளையாடியது. அதன் பின்னர் 36 ஆண்டுகள் கழித்து கத்தார் உலகக்கோப்பையில் கனடா களமிறங்கியுள்ளது.
அகமது பின் அலி மைதானத்தில் நடந்த போட்டியில் கனடா அணி 0-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வியடைந்தது. எனினும், கனடா ரசிகர்கள் தங்கள் அணி விளையாடியதை பார்த்ததே மகிழ்ச்சியாக இருந்ததாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.
Three hundred people at the King’s Head in Winnipeg have stepped away from work for a minute or 105 to watch the first Canadian World Cup match in 36 years. pic.twitter.com/fOK4F9pV0e
— Bartley Kives (@bkives) November 23, 2022
@Matthias Hangst/Getty Images
மகிழ்ச்சியில் திளைத்த ரசிகர்கள்
கனடாவின் வான்கூவரில் உள்ள Pub மற்றும் உணவகங்களில் கூடிய கனடா ரசிகர்கள், 36 ஆண்டுகளுக்கு பின் உலகக்கோப்பையில் தங்கள் அணி விளையாடியதைக் கண்டு ரசித்தனர்.
@Bartley Kives/CBC
இதற்கு முன்பு இத்தாலி அல்லது ஜேர்மனி போன்ற அணிகளுக்காக ஒன்று கூடிய ரசிகர்கள், தற்போது கனடாவுக்கு ஒன்றாக சேர்ந்தது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது, தேசம் முழுவதும் ஒரே அணிக்காக ஒன்று சேர்ந்துள்ளது என வால் எனும் ரசிகர் கூறினார்.
கனேடிய நட்சத்திர வீரர் விளையாடும் உடற்பயிற்சி கூடத்தில் கூடிய பாடசாலை மாணவர்கள் பெரிய திரையில் போட்டியை கண்டு களித்தனர். சில ரசிகர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த தருணத்திற்காக காத்திருந்ததாக கூறினர்.
@Brandon Lynch/CTV News Edmonton
கனேடிய மகளிர் கால்பந்து அணி வீராங்கனை
டொராண்டோவில் ரசிகர்களுடன் ஒருவராக போட்டியை ரசித்த கனேடிய மகளிர் கால்பந்து அணி வீராங்கனை கிறிஸ்டின் சின்கிளையேர், உலகக்கோப்பை ஆடுகளத்தில் கனடாவின் ஆண்களைப் பார்க்க தனது வாழ்நாள் முழுவதும் காத்திருந்ததாக தெரிவித்தார்.
@THE CANADIAN PRESS/Darryl Dyck
மேலும் அவர், போட்டி தொடரின் அடுத்த கட்டத்திற்கு செல்ல கனடா அணிக்கு வாய்ப்பு உள்ளதாக நினைப்பதாகவும், கனடா விளையாடிய விதத்தில் ஈர்க்கப்பட்டதாகவும் கூறினார்.
இன்னும் சில ரசிகர்கள், கனடாவின் ஆட்டம் நல்ல தொடக்கமாக இருந்ததாகவும், தங்கள் அணி மீண்டும் வலுவாக அடுத்த போட்டியில் விளையாடும் என்றும் கூறினர்.