கனடாவின் பயண விதிமுறைகளில் மாற்றம்: அறிவிப்பின்றி அத்தியாவசியமற்ற பயண ஆலோசனை நீக்கம்
எந்த செய்தி அறிக்கையும் அல்லது ஊடக அறிவிப்பும் இல்லாமல், கனேடியர்களுக்கான அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு எதிரான ஆலோசனையை கனேடிய அரசாங்கம் அமைதியாக நீக்கியுள்ளது.
கனடாவில் 2020 மார்ச் மாதம் முதல் COVID-19 தொற்றுநோய் அறிவிக்கப்பட்டதிலிருந்து அதன் Travel Advice and Advisory இணையதளத்தில் கனேடியர்களுக்கான அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு எதிரான ஆலோசனை இருந்தது.
நேற்று வரை, இணையதளத்தில் ஒரு அறிக்கை இருந்தது, அதில் கனேடியர்கள் "மேலும் அறிவிப்பு வரும் வரை கனடாவுக்கு வெளியே அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும்" என்று குறிப்பிட்டு இருந்தது.
அதேபோல், மறுஅறிவிப்பு வரும் வரை கனடாவிற்கு வெளியே அனைத்து கப்பல் பயணங்களையும் தவிர்க்கவும் அறிவுறுத்தி இருந்தது.
அனால் தற்போது, கப்பல் பயணத்திற்கு எதிரான அறிவுரை நடைமுறையில் இருக்கும் நிலையில், அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு எதிரான அறிவுரை நீக்கப்பட்டது, ஆனால் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு மட்டுமே.
Photo: Shutterstock
Travel Advice and Advisory இணையதளத்தில் தற்போது உள்ள பயண அறிவுரையில் கூறப்பட்டிருப்பதாவது:
கனடாவிலோ அல்லது வெளிநாட்டிலோ பயணம் செய்வதற்கு குறைந்தது 14 நாட்களுக்கு முன்னதாக நீங்கள் முழுமையாக தடுப்பூசி போட வேண்டும்.
உங்களுக்கு தடுப்பூசி போடப்பட்டாலும், கோவிட் -19 தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உங்களுக்கு இருக்கலாம். நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றால், நீங்கள் சர்வதேச அளவில் பயணம் செய்யும் போது COVID-19 ஐ ஏற்படுத்தும் வைரஸால் பாதிக்கப்பட்டு பரவும் அபாயம் அதிகம். அதனால் அனைத்து இடங்களுக்கும் அத்தியாவசியமற்ற பயணத்தை நீங்கள் தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், உங்கள் தடுப்பூசி நிலையைப் பொருட்படுத்தாமல், கனடியர்கள் கண்டிப்பாக பின்பற்றவேண்டிய அறிவுரைகள்:
- உங்கள் இலக்கில் உள்ள கோவிட் -19 செயல்பாட்டைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
- முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல் மற்றும் முடிந்தவரை சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற தனிப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவும்
- பயணத்தின் போது கூடுதல் உள்ளூர் பொது சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றவும்
- கனடாவுக்கு வெளியே அனைத்து கப்பல் பயணங்களையும் தவிர்க்கவும்
- கனேடிய பயணத் தேவைகளைச் சரிபார்க்கவும், என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பயணத்திற்கான புதிய தடுப்பூசி பாஸ்போர்ட் திட்டத்தை கனடா அறிவித்ததைத் தொடர்ந்து, அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு எதிரான ஆலோசனையை அரசு நீக்கியுள்ளது.
பயணத்திற்கான கனேடிய கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழ் இப்போது நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடோர், வடமேற்கு பிரதேசங்கள், நோவா ஸ்கோடியா, நுனாவுட், ஒன்டாரியோ, கியூபெக், சஸ்காட்செவான் மற்றும் யூகான் ஆகிய நகரங்களில் குடியிருப்பவர்களுக்கு கிடைக்கிறது என்று நேற்று அரசாங்கம் அறிவித்தது.
Photo: AP
இதனையடுத்து, தடுப்பூசி சான்றிதழ் மற்ற மாகாணங்களில் விரைவில் கிடைக்கும். அவற்றை வெளிநாட்டில் ஏற்றுக்கொள்ள மற்றும் அங்கீகாரம் பெறுவதற்கு சர்வதேச நட்பு நாடுகளுடன் கனேடிய அரசு ஈடுபடுவதாகவும், எனவே உலகம் முழுவதும் பயணத்தை எளிதாக்குவதற்கு இந்த சான்றிதழை ஆதாரம் பயன்படுத்தப்படலாம் என்று ட்ரூடோ கூறினார்.
"கனடியர்கள் தங்களையும், தங்கள் குடும்பங்களையும், தங்கள் சமூகங்களையும் பாதுகாக்க கோவிட் -19க்கு எதிராக தடுப்பூசி போட்டு தங்கள் பங்கைச் செய்துள்ளனர். பயணிகளுக்கு புதிய தடுப்பூசி தேவைகள் வெளிவருவதால், பயணம் செய்பவர்கள் தங்கள் கோவிட்-19 தடுப்பூசிகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிரூபிக்க நம்பகமான, பாதுகாப்பான வழியை அணுகுவதை உறுதிசெய்ய நாங்கள் பணியாற்றி வருகிறோம். மாகாண, பிராந்திய மற்றும் பூர்வீக பங்காளிகளுடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம், எனவே இந்த தரப்படுத்தப்பட்ட ஆதாரம் கனடா முழுவதும் கிடைக்கும்,” என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.