கனடாவின் மிகப்பெரிய தங்கக்கொள்ளை: இந்தியாவில் சந்தேகநபர் மீது அதிரடி விசாரணை
கனடாவில் நடந்த மிகப்பெரிய தங்கக்கொள்ளையில் தொடர்புடைய சந்தேக நபர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
கனடாவில் $22.5 மில்லியன் மதிப்புள்ள தங்கம் கொள்ளை நடந்த விவகாரத்தில், மொஹாலியில் வசிக்கும் 32 வயது சிம்ரன் ப்ரீத் பனேசர் மீது இந்திய அமலாக்கத்துறை (ED) சோதனை நடத்தியுள்ளது.
அவரும் அவரது மனைவியும் கனேடிய குடிமக்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், 2023 ஏப்ரல் மாதம் நடந்தது. 6,600 தங்கப் பட்டிகள் (மொத்தம் 400 கிலோ தங்கம்) மற்றும் $2.5 மில்லியன் மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
பனேசர், அந்த நேரத்தில் Air Canada-வில் செயல் மேலாளராக (acting supervisor) பணியாற்றியுள்ளார்.
கனடா பொலிஸ்-ED இணைந்து விசாரணை
- கனடாவின் பீல் பிராந்திய பொலிஸார், இந்திய ED அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனர்.
- பனேசர், கொள்ளைக்குப் பிறகு மூன்று மாதங்களில் கனடாவை விட்டு வெளியேறியுள்ளார்.
- அவர் மற்றும் அவரது மனைவி கடந்த ஒரு வருடமாக இந்தியாவில் வசித்து வருகின்றனர்.
பனேசர்-அவரது மனைவியின் தொடர்புகள்
பனேசரின் மனைவி முன்னாள் 'Miss India Uganda' காஸ்க்கியாவார். மற்றும் அவர் பாடகி மற்றும் நடிகையும் ஆவார்.
அவர்கள் இந்தியாவில் ஒரு பிரபலமான பஞ்சாபி நடிகருடன் இணைந்து ஒரு திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டிருந்தனர்.
திரைப்படத்திற்கான முதலீடு எங்கே இருந்து வந்தது என்பதையும் ED ஆய்வு செய்யவுள்ளது.
விசாரணையில் மேலும் என்ன தெரிந்தது?
பனேசர், ஏர் கேனடாவில் பணியாற்றுவதற்கு முன்பு பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் சக்கர நாற்காலி சேவை நிறுவனத்தில் ஆறு ஆண்டுகள் வேலை செய்துள்ளார்.
விமான நிலையத்தின் உள் செயல்பாடுகளை நன்கு அறிந்தவர் என்பதால், கொள்ளையில் அவரின் பங்கு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ED அதிகாரிகள், பனேசர் மற்றும் அவரது மனைவியை மறுபடியும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த தங்க கொள்ளை தொடர்பான பிரம்மாண்ட பணப்பரிமாற்றங்கள் மற்றும் பணமோசடிகள் குறித்து இந்திய-கனடா அதிகாரிகள் இணைந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Canada Gold Heist