கனடா: குவாண்டம் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு 92 மில்லியன் டொலர் நிதியுதவி அறிவிப்பு
கனடா அரசு, நாட்டின் முன்னனி குவாண்டம் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு 92 கனேடிய டொலர் (67 USD) நிதியுதவியை அறிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் புதுமை அமைச்சர் எவன் சாலமோன், " கனடாவின் திறமையான குவாண்டம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு செல்லாமல், நாட்டிலேயே வளரவேண்டும்" என்ற நோக்கத்துடன் இந்த உதவி வழங்கப்படுவதாக கூறியுள்ளார்.
இந்த நிதியுதவி பெறும் நிறுவனங்கள்:
Xanadu Quantum Technologies - விரைவில் Nasdaq மற்றும் Toronto Stock Exchange-ல் 3.6 பில்லியன் டொலர் மதிப்பீட்டுடன் பங்கு சந்தையில் வரவிருக்கும் நிறுவனம்.
Anyon Systems, Nord Quantique, Photonic - இந்த நிறுவனங்கள் மூன்றையும், அமெரிக்காவின் DARPA (Defence Advanced Research Projects Agency) முன்பு ஆர்வத்துடன் அணுகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Xanadu நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO கிரிஸ்டியன் வீட்ப்ரூக், “அமெரிக்காவில் இருந்து பணமும் திறமையும் ஈர்க்கும் அழுத்தம் எப்போதும் இருந்தது. ஆனால் கனடா அரசின் இந்த நிதியுதவி, நாங்கள் இங்கேதான் தொடர வேண்டும் என்பதற்கான வலுவான காரணமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிதியுதவி, கனடா அரசின் 334 மில்லியன் கனேடிய டொலர் மதிப்பிலான 5 ஆண்டு திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதன் மூலம், நாட்டின் குவாண்டம் துறையை வலுப்படுத்தி, உலகளாவிய போட்டியில் முன்னிலை பெறுவதே இலக்கு.
மேலும், கனடாவில் பணவீக்கம் 2.2 சதவீதம் என்ற நிலையான அளவில் உள்ளது. உணவுப் பொருட்களின் விலை (பழம், மாட்டிறைச்சி, காப்பி) அதிகரித்தாலும், மொத்த பொருளாதார நிலைமை சீராக உள்ளது.
இந்த அறிவிப்பு, கனடாவின் தொழில்நுட்ப வளர்ச்சி, வேலை வாய்ப்பு மற்றும் உலகளாவிய போட்டித் திறனை மேம்படுத்தும் முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Canada quantum technology funding 2025, Xanadu Quantum Technologies Nasdaq listing, Anyon Systems Nord Quantique Photonic grant, Canada 92 million CAD quantum innovation plan, DARPA interest in Canadian quantum firms, Christian Weedbrook Xanadu CEO statement, Canada quantum sector 5-year 334 Mn CAD program, Canadian inflation steady 2.2 percent, Quantum computing race Canada vs US, Ottawa strengthens quantum research ecosystem