வாடகைத் தாய் மூலம் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்டுள்ள சீன பில்லியனர்
சீனாவைச் சேர்ந்த பில்லியன் ஒருவர், அமெரிக்காவில் வாடகைத் தாய் ஏஜென்சிகள் மூலம் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுள்ளார்.
சீனாவின் ஆன்லைன் கேமிங் நிறுவனமான Duoyi-யின் நிறுவனர் சூ போ (Xu Bo), அமெரிக்காவில் வாடகைத் தாய் (Surrogacy) மூலம் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுள்ளார் என Wall Street Journal மற்றும் பல சமூக ஊடக பதிவுகள் உறுதிப்படுத்துகின்றன.
தன்னைத் தானே “சீனாவின் முதல் தந்தை” என்று அழைத்துகொள்ளும் சூ போ, 2023-ல் குறைந்தது 50 உயர்தர மகன்களை உருவாக்க வேண்டும் என்ற தனது திட்டத்தை வெளிப்படையாக அறிவித்திருந்தார்.
ஆண் குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்ள விரும்பும் அவர், “ஆண்கள் பெண்களை விட மேம்பட்டவர்கள்” என்ற கருத்தைக் கொண்டுள்ளார்.

அமெரிக்க குடும்ப நீதிமன்றம் முதலில் அவரது பெற்றோர் உரிமையை மறுத்திருந்தாலும், பின்னர் அவர் மேல்முறையீட்டில் வெற்றி பெற்றதாக Weibo-வில் பதிவுகள் தெரிவிக்கின்றன.
மேலும், “அதிக குழந்தைகள் இருந்தால் எல்லா பிரச்சினைகளும் தீரும்” எனவும், தனது குழந்தைகள் எதிர்காலத்தில் எலான் மஸ்க்-ன் குழந்தைகளுடன் திருமணம் செய்வார்கள் எனவும் அவர் கற்பனை செய்ததாக பதிவுகள் கூறுகின்றன.
அவரது முன்னாள் காதலி டாங் ஜிங், சூ போ 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தை என குற்றம் சாட்டியுள்ளார். இருவரும் தற்போது இரண்டு மகள்களின் காவல் உரிமைக்காக போராடி வருகின்றனர்.
சூ போ, டாங் ஜிங்கிற்கு 819 மில்லியன் யுவான் (115 மில்லியன் அமெரிக்க டொலர்) வழங்கியதாகவும், அதில் 515 மில்லியன் யுவான் (72 மில்லியன் டொலர்) மட்டுமே திருப்பி வழங்கப்பட்டதாகவும், மீதமுள்ள 300 மில்லியன் யுவான் பெறுவதற்காக 2024-ல் வழக்கு தொடர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சீனாவில் சரோகசி தடை செய்யப்பட்டிருப்பதால், பல பணக்காரர்கள் அமெரிக்காவில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் வழியைத் தேர்ந்தெடுக்கின்றனர். தற்போது, சூ போவின் குழந்தைகள் காலிஃபோர்னியாவின் ஐர்வைன் பகுதியில் குழந்தை பராமரிப்பாளர்களின் (Nanny) பராமரிப்பில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் சீன சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Xu Bo Chinese billionaire surrogacy, Duoyi gaming founder surrogate children, China surrogacy ban US babies, Xu Bo custody battle Tang Jing, Elon Musk Xu Bo children marriage claim, Xu Bo 100 surrogate kids Irvine California, Chinese elites US-born babies trend, Surrogacy controversy China 2025, Xu Bo lawsuit 300 million yuan dispute, Billionaire family dynasty surrogacy plan