சர்வதேச மாணவர்களுக்காக புதிய விதி ஒன்றை அமுல்படுத்தும் கனடா!
கனடா இறுதியாக சர்வதேச மாணவர்களுக்கு நவீன 24 மணி நேர வேலை விதியை இந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தவுள்ளது.
அதாவது இப்போது உள்ள 20 மணி நேர வேலை வரம்பு 24 மணி நேரமாக உயர்த்தப்படும்.
இது சர்வதேச மாணவர்களுக்கு தங்கள் கல்வியையும் வேலை வாய்ப்புகளையும் சமநிலைப்படுத்தும் சுதந்திரத்தை வழங்கும்.
இதனை IRCC (Immigration, Refugees and Citizenship Canada) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கொரோனா காலத்தில் வேலை குறைவுகளை சமாளிக்க, அதிக நேர வேலை அனுமதி வழங்கப்பட்ட நிலையில், புதிய விதி தற்போது கல்வியை பாதிக்காமல் மாணவர்கள் அதிகபட்சம் 24 மணி நேரம் வேலை செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது.
மாணவர்கள் இதன் மூலம் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள, மேலும் கனடாவில் தங்கி பணிபுரிவதற்கான நெருக்கடியின்றி கூடுதல் உதவிகளை பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Immigration, Refugees and Citizenship Canada, IRCC, Canada, Canada to implement 24-hour work rule for foreign Students