3,500 சுகாதார பணியாளர்களுக்கு நிரந்தர வதிவிட அழைப்பு விடுத்துள்ள கனடா
கனடா அரசு, நாட்டில் நிலவும் மருத்துவ மற்றும் சமூக சேவை துறைகளில் பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்க, 3,500 பேருக்கு நிரந்தர வதிவிட (Permanent Residency) அழைப்புகளை வழங்கியுள்ளது.
இந்த அழைப்புகள் நவம்பர் 14, 2025 அன்று Express Entry முறையின் கீழ் வெளியிடப்பட்டன.
இந்த சுற்றில், CRS (Comprehensive Ranking System) குறைந்தபட்ச மதிப்பெண் 462 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய Canadian Experience Class சுற்றுகளுடன் ஒப்பிடும்போது இது குறைவான மதிப்பெண் ஆகும்.
இதனால், வெளிநாடுகளில் உள்ள மருத்துவ மற்றும் சமூக சேவை நிபுணர்களுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அரசு தெரிவித்ததாவது, மருத்துவமனைகள், அவசர சிகிச்சை, நீண்டகால பராமரிப்பு, மனநல ஆதரவு, சமூக சேவைகள் போன்ற துறைகளில் கடுமையான பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது.
இதனை சமாளிக்க, அனுபவமுள்ள நிபுணர்களை விரைவாக இணைத்துக்கொள்ளும் நோக்கில் இந்த அழைப்புகள் வழங்கப்பட்டுள்ளன
இந்த பிரிவில் தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தது 6 மாதங்கள் தொடர்ச்சியான முழுநேர பணியாற்றியிருக்க வேண்டும்.
மேலும், குறைந்தது ஒரு வருட திறமையான வேலை அனுபவம், அத்துடன் சுகாதார மற்றும் சமூக சேவை தொடர்பான 37 தொழில்களில் ஏதேனும் ஒன்றில் அனுபவம் இருக்க வேண்டும்.
தகுதி பெற்றவர்கள் 60 நாட்களுக்குள் முழுமையான PR விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதில் அடையாள ஆவணங்கள், பொலிஸ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை, கல்வி மதிப்பீடு, வேலை அனுபவ சான்றுகள் ஆகியவை அடங்கும்.
கனடா அரசின் இந்த நடவடிக்கை, நாட்டின் சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதோடு, உலகளாவிய நிபுணர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |