சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள கனடாவின் புதிய திட்டம்
உலகளவில் அரிய மண் தாதுக்கள் (Rare Earths) மற்றும் முக்கிய கனிமங்களின் சுரங்கம் மற்றும் செயலாக்கத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், கனடா அரசு புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
கனடாவின் இயற்கை வளத்துறை அமைச்சர் Tim Hodgson, “தேசிய நலனுக்காக முக்கியமான சுரங்க மற்றும் செயலாக்க திட்டங்களில் அரசு நேரடியாக equity stake (பங்குதார முதலீடு) எடுக்கும்” என தெரிவித்துள்ளார்.
அரசு ஏற்கனவே பல திட்டங்களை ஆய்வு செய்து வருகிறது. இதில் அரிய மண் தாதுக்கள் மற்றும் லித்தியம், கிராஃபைட், டெர்பியம், டிஸ்ப்ரோசியம் போன்ற கனிமங்கள் அடங்கும்.
இவை மின்சார வாகனங்கள், நுகர்வோர் மின்னணு சாதனங்கள், ஆயுத உற்பத்தி ஆகியவற்றுக்கு அத்தியாவசியமானவை.

அமெரிக்கா முன்னதாக MP Materials, Lithium Americas, Trilogy Metals போன்ற நிறுவனங்களில் பங்குதார முதலீடு செய்திருப்பத்தை போல, கனடாவின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, வாங்கூவர் நகரை மையமாகக் கொண்ட கனேடிய நிறுவனங்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கனடா அரசு, Nouveau Monde Graphite (Quebec), Canada Nickel (Ontario), Tungsten & Molybdenum (New Brunswick) போன்ற திட்டங்களுக்கு விரைவான அனுமதி வழங்கும். இதனால், பங்குச் சந்தையில் சில நிறுவனங்களின் மதிப்பு ஏற்கனவே உயர்ந்துள்ளது.
மேலும், 2 பில்லியன் டொலர் Critical Minerals Sovereign Fund மூலம் equity முதலீடு, loan guarantee, offtake agreements ஆகியவை வழங்கப்படும். அதோடு, Canada Growth Fund மூலம் கூடுதல் முதலீடுகள் செய்யப்படும்.
கனடா, சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க scandium, graphite போன்ற கனிமங்களை ஏற்கனவே சேமித்து வருகிறது. எதிர்காலத்தில் மேலும் பல தாதுக்கள் சேமித்து (stockpiling) வைக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
G7 கூட்டமைப்பு நாடுகள் இணைந்து, சீனாவை தவிர்த்து புதிய கனிம ஆதாரங்களை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக கனடாவின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Canada rare-earth mining equity stakes, Canada vs China critical minerals strategy, Tim Hodgson Canada mining investment plan, Canada Growth Fund rare-earth projects, Canada $2B critical minerals sovereign fund, Canada lithium graphite scandium reserves, Canada rare-earths stockpiling strategy, G7 allies rare-earth supply chain Canada, Canada Nouveau Monde Graphite Quebec project, Canada Nickel Ontario mining expansion