கனடா குடிவரவு மோசடி: 5 ஆண்டுகள் தடை எச்சரிக்கை
கனடா குடிவரவு மோசடியில் பிடிபட்டால் 5 ஆண்டுகள் நுழைய தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடா குடியுரிமை, அகதிகள் மற்றும் குடிவரவு துறை (IRCC) கடந்த வாரம் குடிவரவு மோசடிகள் அதிகரித்து வருவது தொடர்பில் எச்சரிக்கையொன்றை வெளியிட்டது.
அதில், தவறான ஆவணங்கள் அல்லது பொய்யான தகவல்களை சமர்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கனடாவிற்குள் நுழைய தடை செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.
2024-ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் சரரசியாக 9,000 மோசடி விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
பொய்யான பாஸ்போர்ட், வேலை வாய்ப்பு ஆவணங்கள், கல்வி சான்றிதழ்கள், திருமண ஆவணங்கள், DNA சோதனை அறிக்கைகள் உள்ளிட்டவை தவறானவையாக இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
மேலும் விண்ணப்பதாரரின் பெயரில் IRCC-யில் நிரந்தர மோசடி பதிவாகும் அபாயமும் உள்ளது.
இந்த எச்சரிக்கையின் பின்னணியில், பெங்களுருவில் Owlspriority India Pvt Ltd என்ற தனியார் நிறுவனத்தின் மீது பலர் மோசடியாக வேலை வாய்ப்பு மற்றும் விசா வாக்குறுதிகள் அளித்ததாக புகார் அளித்துள்ளனர்.
IRCC மேலும், தற்காலிக திருமண மோசடிகள், விசா கட்டணங்களை திருப்பி வாங்கும் chargeback மோசடிகள் போன்றவற்றையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கிறது.
விசா கட்டணத்தை திருப்பி வாங்கும் விண்ணப்பதாரர்கள் 10 ஆண்டுகள் வரை கண்டாவிற்குள் நுழைய தடை செய்யப்படலாம்.
உண்மையான ஆவணங்களுடன் உரிமம் பெற்ற ஆலோசகர்களுடன் பணியாற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு IRCC அறிவுறுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Canada immigration fraud, IRCC visa ban warning, Canada visa scam crackdown, Fake documents Canada visa, Express Entry fraud cases, Canada 5-year entry ban, IRCC immigration rules 2025