கனேடிய பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் காலிஸ்தான் ஆதரவு கோஷங்கள்., ட்ரூடோ எதிர்ப்பு
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொண்ட சீக்கிய நிகழ்ச்சியில் எழுந்த காலிஸ்தான் ஆதரவு கோஷங்களுக்கு, அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவில் நடைபெற்ற கல்சா தின (Khalsa Day) நிகழ்வில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொண்டார்.
கல்சா தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, சீக்கிய சமூகத்தினரிடம் உரையாற்ற ட்ரூடோ மேடைக்கு வந்தார்.
அப்போது கூட்டத்தில் சிலர் காலிஸ்தான் ஆதரவு கோஷங்களை (Khalistan Zindabad) எழுப்பினர். இருப்பினும், ட்ரூடோ அவற்றைப் புறக்கணித்து தனது பேச்சைத் தொடர்ந்தார்.
நாட்டில் உள்ள சீக்கியர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாக்க தனது அரசு எப்போதும் துணை நிற்கும் என்று அவர் உறுதியளித்தார்.
அதேபோல், சீக்கியர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை தாயகத்தில் பார்க்கும் வகையில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே விமானப் போக்குவரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ட்ரூடோ தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |