கனடாவில் நிரந்தர குடியுரிமையுடன் இந்தியர்களுக்கு வேலை! இவர்கள் எல்லாம் விண்ணப்பிக்கலாம்
கனடாவில் புதிய குடியேற்ற திட்டங்கள் மூலம் பிறநாட்டினருக்கு நிரந்தர குடியுரிமையுடன் வேலை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய குடியேற்ற திட்டங்கள்
அமெரிக்காவில் விசா தொடர்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்புகளால், வெளிநாட்டினர் பலர் அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
அங்கு நிரந்தர குடியுரிமைக்கு பல கட்டுப்பாடுகளை கொண்டு வருவதாக, ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து பலரும் முன்கூட்டியே அறுவை சிகிச்சை மூலம், கருவில் இருக்கும் குழந்தையை வெளியே எடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில் அண்டை நாடான கனடா புதிய குடியேற்ற திட்டங்களை அறிவித்துள்ளது.
கனடாவில் சுமார் 1.35 மில்லியன் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளிகள் உள்ள நிலையில், அந்நாட்டின் குடியேற்றம் மற்றும் குடியுரிமை அமைச்சர் மார்க் மில்லர் புதிய திட்டங்களை அறிவித்துள்ளார்.
நேரடியாக குடியுரிமை பெறும் வாய்ப்பு
திறமையான தொழிலாளர்களை நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஈர்ப்பதற்காக இந்த இரண்டு கொண்டு வருவதாக கனடா அரசு கூறுகிறது.
இதன்மூலம் வேலைவாய்ப்பு கிடைப்பது மட்டுமின்றி, நேரடியாக குடியுரிமை பெறும் வாய்ப்பையும் வெளிநாட்டவர்களுக்கு கனடா அரசு அளிக்கிறது.
அதாவது, ஊரக சமூக குடியேற்ற திட்டம் (RCIP) ஊரக பகுதிகளில் (சிறிய டவுன், கிராமப்புறங்கள்) நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை சரி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
18 பகுதிகளில் செயல்படுத்தப்படும்
இந்த திட்டம் மூலம் உள்ளூர் நிறுவனங்கள், அதாவது இப்பகுதிகளில் இருக்கும் நிறுவனங்கள் திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களுடன் இணைக்கப்படுவார்கள். இந்த திட்டம் பல மாகாணங்களில் 18 பகுதிகளில் செயல்படுத்தப்படும்.
இதன்மூலம் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வேலை வாய்ப்புடன் நிரந்த குடியுரிமையும் கிடைக்கும்.
அதேபோல், இரண்டாவது திட்டமான பிரெஞ்சு பேசும் சமூக குடியேற்றத் திட்டம் (FCIP), சிறுபான்மையின பிரெஞ்சு பேசும் சமூகங்களுக்கு (கியூபெக் தவிர்த்து), பிரெஞ்சு பேசும் மக்களை அதிகளவில் குடியேற்ற உதவும் திட்டமாக இத்திட்டம் செயல்படுகிறது.
இவ்விரு திட்டங்களும் உள்ளூர் பொருளாதார மேம்பாட்டு அமைப்புகள் மற்றும் கனடா குடியேற்றம், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு (IRCC) இடையே இணைந்து செயல்படும்.
தகுதிகள்
முக்கியமான தொழிலாளர் பற்றாக்குறையை உள்ளூர் அமைப்புகள் தங்கள் சமூகங்களில் அடையாளம் கண்டு; இந்த துறையில் அனுபவம் மற்றும் நிபுணத்துவம் பெற்றுள்ள ஊழியர்களை நியமிக்க வழிவகை செய்கிறது.
இந்த திட்டங்களுக்கு கீழ் விண்ணப்பம் செய்பவர்களை ஆய்வு செய்து, வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க நம்பகமான நிறுவனங்களை நியமித்து, பணியில் அமர்த்தி, அந்த நிறுவனங்கள் நிரந்தர குடியுரிமைக்கு தகுதியானவரை பரிந்துரைக்கும்.
குறிப்பிட்ட தகுதிகளை இந்த திட்டங்களுக்காக பூர்த்தி செய்ய வேண்டும். பின் நியமிக்கப்பட்ட நிறுவனங்கள் வழங்கும் வேலை ஆணையை முதலில் பெற வேண்டும்.
அதன் பின்னர்தான் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு தகுதி அடைய முடியும். எனினும், இந்த வேலை வாய்ப்பை பெற சில முக்கியமான தகுதிகள் வேண்டும்.
இந்த வேலை வாய்ப்பை பெற சில முக்கியமான தகுதிகள் வேண்டும். அதாவது, இந்த வேலை தொடர்புடைய அனுபவம் மற்றும் மொழி திறன் தேவைகள் ஆகியவை அடங்கும்.
கனடாவிற்கு வெளியே கல்வி பயின்ற விண்ணப்பதாரர்கள் கல்வி சான்றிதழ் மதிப்பீட்டையும் வழங்க வேண்டும்.
கூடுதலாக, அனைத்து விண்ணப்பதாரர்களும் கனடாவில் தங்கள் குடும்பத்தினரை நிர்வாகம் செய்துகொள்ளும் அளவுக்கு போதுமான நிதி ஆதாரம் இருப்பதை நிரூபிக்க வேண்டும்.
சுகாதாரத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள், குறிப்பாக செவிலியர் உதவியாளர்கள் மற்றும் வீட்டு பராமரிப்பு தொழிலாளர்கள் போன்றோர் அதிக தேவை உள்ளவர்கள் மற்றும் இந்தத் திட்டங்களுக்கு தகுதியானவர்கள் ஆவர்.
மேலும், சுகாதாரத்துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் தங்கள் நிரந்தர குடியுரிமை விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்போது, இரண்டு ஆண்டுகளுக்கு தற்காலிக Work Permit பெற்றவர்களாகவும் இருக்கலாம்.
RCIP திட்டத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்
நோவா ஸ்கோஷியா: Pictou மாகாணம்
ஒன்டாரியோ: நார்த் பே, சட்பரி, டிம்மின்கள், சால்ட் ஸ்டீ. மேரி, தண்டர் பே
மானிடோபா: ஸ்டீன்பாக், அல்டோனா/ரைன்லேண்ட் பிராண்டன்
சஸ்கட்சுவான்: மூஸ் ஜா
அல்பார்ட்டா: கிளாரெஷோம்
பிரிட்டிஷ் கொலம்பியா: வெஸ்ட் கூட்டனே, வெஸ்ட் ஒகனாகன் ஷுவாப், பீஸ் லியார்ட்
FCIP திட்டத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்:
நியூ பிரன்சுவிக்: அகாடியன் தீபகற்பம்
ஒன்டாரியோ: சட்பரி, டிம்மின்கள், சூப்பீரியர் கிழக்கு பகுதி
மானிடோபா: செயிண்ட் பியர் ஜோலிஸ்
பிரிட்டிஷ் கொலம்பியா: கெலோனா
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |