ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகம்! அமுலுக்கு வரும் கனடா கொள்ளை முடிவு
புகையிலை எச்சரிக்கை வாசகத்தை ஒவ்வொரு சிகரெட்டிலும் அச்சடிக்கும் கொள்கை ரீதியான முடிவை ஆகஸ்ட் 1ம் திகதி முதல் கனடா நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
புகையிலை எச்சரிக்கை
புகைப்பிடிப்பதனால் உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு உள்ளாகி அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே புகைபிடிப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்து பல்வேறு நாடுகளும் விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரும்பாலான நாடுகள் சிகரெட்டில் அதன் தீய விளைவுகள் குறித்த புகைப்படத்தையும், எச்சரிக்கை வாசகங்களையும் அச்சடித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த புகையிலை சிகரெட்டில் அச்சடிக்கப்பட்ட வாசகங்களை புகைப்பவர்கள் பெரும்பாலானோர் அறிந்தே உள்ளனர்.
கனடா எடுத்துள்ள கொள்கை ரீதியான முடிவு
இந்த சூழலில் புகையிலை சிகரெட்டில் உள்ள ஒவ்வொரு சிகரெட்டிலும் அதனால் ஏற்பட கூடிய தீய விளைவுகள் குறித்த எச்சரிக்கை வாசகங்களை அச்சடிப்பது தொடர்பான கொள்கை ரீதியான முடிவை கனடா கடந்த ஆண்டு எடுத்து இருந்தது.
The Tobacco Products Appearance, Packaging and Labelling Regulations came into force.
— Health Canada and PHAC (@GovCanHealth) August 2, 2023
Most changes will be seen within the next year, including health warnings printed directly on most cigarettes sold in Canada.
Learn more: https://t.co/kHoniIo2k3 pic.twitter.com/buKM71Cokg
அதன்படி இந்த ஆண்டில் ஆகஸ்ட் 1ம் திகதி முதல் ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகங்களை அச்சடித்து விற்பனை செய்யும் கொள்கை செயற்பாட்டு வருகிறது.
ஆண்டின் பிற்பகுதி முதலே கிங் சைஸ் சிகரெட்டில் “சிகரெட் ஆண்மையை குறைக்கும், ஒவ்வொரு பஃப்பிலும் விஷம், புகையிலை குழந்தைகளுக்கு கேடு விளைவிக்கும், புற்றுநோயை உண்டாக்கும்" என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்று இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |