கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவியை பிரிந்து வாழ முடிவு! 18 வருட திருமண வாழ்க்கை நிறைவு
கனேடிய நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி சோஃபி இருவரும் பிரிந்து வாழ முடிவெடுத்து இருப்பதாக புதன்கிழமை அறிவித்துள்ளனர்.
பிரிந்து வாழ முடிவு
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி சோஃபி கிரெகோயர் இருவரும் கடந்த 2005ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
getty
கிட்டத்தட்ட இருவருக்கும் திருமணம் ஆகி 18 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது பிரிந்து வாழ முடிவெடுத்து இருப்பதாக இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
ஜஸ்டின் ட்ரூடோ பதிவு
இது தொடர்பாக ஜஸ்டின் ட்ரூடோ இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், நிறைய அர்த்தமுள்ள மற்றும் கடினமான விவாதங்களுக்குப் பிறகு பிரிந்து வாழ நாங்கள் முடிவெடுத்துள்ளோம் என்ற உண்மையை நானும் சோஃபி உங்களுக்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எப்போதும் போல, நாங்கள் உருவாக்கிய மற்றும் கட்டியெழுப்ப இருக்கிற அனைத்திற்கும் ஆழமான காதல் மற்றும் மரியாதை கொண்ட நெருங்கிய குடும்பங்களாக தொடர்ந்து இருப்போம்.
மேலும் எங்கள் குழந்தைகளின் நலன் கருதி, மரியாதையையும் அவர்களின் தனியுரிமையையும் கேட்டுக் கொள்கிறோம் ,”நன்றி” என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Sophie Grégoire Trudeau, Justin Trudeau