கனடாவில் வாழ்பவர் மீது இந்தியப் பெண் சரமாரி புகார்: நடந்தது என்ன தெரியுமா?
கனடாவில் வாழும் ஒருவர் மீது, இந்தியப் பெண் ஒருவர், ஏமாற்றி இரண்டு பெண்களைத் திருமணம் செய்தது, பெண் ஒருவரை ஏமாற்றியது, வன்புணர்வு செய்தது ஆகிய புகார்களைத் தெரிவித்துள்ளார்.
லூதியானாவில் வாழும் பெண் ஒருவர், உள்ளூர் திருமணத் தகவல் இணையதளம் வாயிலாக தெரிய வந்த, கனடாவில் வாழும் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இந்த பெண்ணுடன் ஒரு மாதம் தங்கிய அந்த நபர், பின்னர் கனடா புறப்பட்டுச் சென்றுள்ளார். அந்தப் பெண்ணை கனடாவுக்கு அழைத்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிவித்த அந்த நபர், அதற்காக அந்தப் பெண்ணிடமிருந்து 24 இலட்ச ரூபாய் பெற்றுள்ளார்.
இதற்கிடையில், ஒரு பெண் வந்து இந்தப் பெண்ணை சந்தித்துள்ளார். இந்தப் பெண்ணுக்கு தன் கணவருடன் தவறான தொடர்பு இருப்பதாக கருதி தான் அவரைப் பார்க்க வந்ததாக அந்தப் பெண் கூற, தனக்கும் அவருக்கும் திருமணம் ஆனதாக இந்தப் பெண் கூற, அவருக்கு ஏற்கனவே தன்னுடன் திருமணமாகிவிட்டதாக அந்தப் பெண் கூற, ஒரே குழப்பம்.
பிறகுதான், அந்த கனேடியருக்கு ஏற்கனவே திருமணம் ஆன விடயமும், அதை மறைத்து அவர் தன்னை இரண்டாவது திருமணம் செய்ததும் லூதியானவைச் சேர்ந்த பெண்ணுக்குத் தெரியவந்துள்ளது.
ஆகவே, அவர் பொலிசில் புகாரளிக்க, அந்த கனேடியர் மீது, இரண்டு பெண்களைத் திருமணம் செய்தது, பெண் ஒருவரை ஏமாற்றியது, வன்புணர்வு செய்தது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        