ட்ரம்பின் Golden Dome திட்டத்தில் இணையும் கனடா - பிரதமர் மார்க் கார்னி உறுதி
ட்ரம்பின் Golden Dome திட்டத்தில் கனடா இணையலாம் என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள 175 பில்லியன் டொலர் மதிப்பிலான 'Golden Dome' ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தில், கனடாவும் முதலீடு செய்யும் வாய்ப்பு உள்ளது என கனேடிய பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார்.
கனடா மற்றும் கனேடியர்களின் பாதுகாப்பு தேவைகளுக்கும் இந்த திட்டத்தில் இணைவது என்பது நல்ல யோசனைதான் என்று கார்னி தெரிவித்துள்ளார்.
இது, சீனாவும் ரஷ்யாவும் தரும் அபாயங்களை எதிர்க்க உருவாக்கப்படுகின்றது. இத்திட்டத்தின் தலைமைக்கு Space Force ஜெனரலை ட்ரம்ப் நியமித்துள்ளார்.
Golden Dome என்பது இஸ்ரேலின் Iron Dome திட்டத்தினைப் போல உருவாக்கப்படும் ஒரு பாரிய வான்வழி பாதுகாப்பு அமைப்பு ஆகும்.
ஆனால் இது குறுகிய தூரத்தில் மட்டும் செயல்படும் Iron Dome-ஐ விட மிகவும் மேம்பட்டதாக இருக்கும்.
இது, hypersonic, space-based மற்றும் அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகள் உள்ளிட்ட பலவகை தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.
“நாம் விரும்பினால், அமெரிக்காவின் Golden Dome திட்டத்தில் முதலீடு செய்து பங்கேற்க முடியும். இது குறித்த உயர் நிலை பேச்சுவார்த்தையில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டுள்ளது” என கார்னி கூறினார். அவர் மேலும், ட்ரம்புடன் சில முறை இந்த திட்டம் குறித்து பேசியுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.
NORAD பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் பிற புதிய சிக்கன பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகளும் இப்போது அமெரிக்க-கனடா பேச்சுவார்த்தைகளில் இடம்பெற்றுள்ளன.
இது குறித்து ட்ரம்ப் கூறியது என்ன?
“கனடா இந்த திட்டத்தில் சேர விருப்பம் தெரிவித்துள்ளது. அவர்கள் பாதுகாப்பை நாடுகிறார்கள். ஆனால் அவர்களும் தங்களுக்கேற்ப செலவளிக்க வேண்டும்,” என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Trumps Golden Dome Plan, Golden Dome Canada, Mark Carney Trump missile shield, Canada US security partnership, NORAD missile defence, Golden Dome vs Iron Dome, Trump missile defence system, Canada defence news, US-Canada Golden Dome talks, Mark Carney Trump relations, Trump Canada fair share