J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம்
இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதலுக்கும் பிறகு, சீனா, தனது அதிநவீன J-35A ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வேகமாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
முதற்கட்டமாக 30 விமானங்கள் 2025 ஆகஸ்டில் பாகிஸ்தான் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீன அரசாங்கம், இந்த ஒப்பந்தத்தை ஒரு 'வெகுமதி' எனக் கருதுகிறது.
பாகிஸ்தான் விமானப்படையின் இந்தியாவுடன் சமீபத்தில் நடந்த மோதலில் காட்டிய செயல்திறனை பாராட்டும் விதமாக, 50% தள்ளுபடியும், சலுகை கட்டண திட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான், மொத்தமாக 40 எண்ணிக்கையிலான J-35A விமானங்களை வாங்கும் திட்டத்தில் உள்ளது.
இது சீனாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் ஏற்றுமதியாகும் முதல் நிகழ்வாகும்.
இந்நிலையில் பாகிஸ்தான் விமானப்படை வீரர்கள், தற்போது பீஜிங்கில் பயிற்சி பெற்று வருவதாகவும், இது விமானங்கள் வாங்கப்படுவது உறுதி என்ற நம்பிக்கையை உருவாக்குவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும், சீனா, பாகிஸ்தானில் 25 பில்லியன் டொலர் முதலீட்டை அறிவித்துள்ளது. இது CPEC (China-Pakistan Economic Corridor) பாகம் 2 எனப்படும் திட்டத்தின் கீழ், சிவில் மற்றும் இராணுவ உள்கட்டமைப்புகளில் செய்யப்பட்ட முதலீடு ஆகும்.
இது இந்தியாவின் விமான சக்தியை விரிவுபடுத்தும் முயற்சிக்கு எதிரான சீனா-பாகிஸ்தான் கூட்டணியின் தொடர்ச்சியான நகர்வாக கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
China J-35A Pakistan deal, Pakistan 5th gen fighter jets, J-35 delivery to Pakistan, India Pakistan air conflict, China Pakistan military ties, J-35 stealth fighter export, CPEC Phase 2 investments, Gwadar Port China support, PAF J-35 training China, Pakistan China air force deal