இந்தியா-கனடா உறவுகள் வலுப்பெற முயற்சி - புதிய தூதர்கள் நியமனம்
கனடாவும் இந்தியாவும் இரு நாடுகளுக்குமான தங்கள் தூதர்களை புதிதாக நியமித்துள்ளன.
கனடா தனது புதிய இந்திய தூதராக அனுபவமிக்க டிப்ளோமாட் கிறிஸ்டோபர் கூட்டரை (Christopher Cooter) நியமித்திட்டுள்ளது. இந்த பதவி கடந்த ஆண்டு காலியாக இருந்தது.
அதேபோல் இந்தியாவும் கனடாவுக்கான தனது புதிய தூதராக தினேஷ் கே. பட்நாயக்கை நியமிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த இரு நியமங்களும், கடந்த ஆண்டு ஏற்பட்ட கடுமையான அரசியல் மோதலுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மீண்டும் மேம்படுவதற்கான முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.
2023-ல் சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்திப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொலை செய்யப்பட்டார். அவரை இந்தியா 2020-ல் தீவிரவாதியாக அறிவித்திருந்தது.
இந்த கொலையில் இந்திய அரசின் தொடர்பு இருப்பதாக முன்னாள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதால் இரு நாடுகளும் தூதர்களை வெளியேற்றின.
இந்தியா கனடாவின் 6 மூத்த தூதர்களை வெளியேற்றியது. அதேபோல், கனடாவும் இந்திய தூதரை வெளியேற்றியது.
2025 ஜூனில், கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து, மூத்த தூதர்களை மீண்டும் நியமிக்க ஒப்பந்தமானார்கள்.
இது இரு நாடுகளுக்கிடையேயான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை மீண்டும் கட்டமைக்கும் முயற்சியாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |