கனடா அறிவித்த புதிய express entry முறை; பல துறைகளில் வேலைவாய்ப்பு
கனடா தொழிலாளர் தட்டுப்பாட்டை சமாளிக்க புதிய எக்ஸ்பிரஸ் என்ட்ரி முறையை அறிவித்துள்ளது.
கனடா 2025 express entry வேலைவாய்ப்பு முறையை புதுப்பித்து, அதிகமான தொழிலாளர்களை சேர்ப்பதற்கான புதிய பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
கனடாவின் IRCC இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதிய மாற்றங்கள் மற்றும் இலக்குகள்
கனடாவின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க தேவையான திறமையான தொழிலாளர்களை ஈர்க்கும் நோக்கில் இந்த மாற்றம் கொண்டவரப்பட்டுள்ளது.
Federal Skilled Worker Program, Federal Skilled Trades Program மற்றும் Canadian Experience Class போன்ற குடியேற்ற திட்டங்களின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோருக்கு இது பயன்படும்.
கனடாவின் பணியாளர் வளர்ச்சியில் குடியேற்றம் 100% பங்கை வகிக்கிறது, எனவே தொழிலாளர் தட்டுப்பாட்டை சமாளிக்க புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
முக்கியத் துறைகள்
கனடா தொழிலாளர் தட்டுப்பாடு உள்ள துறைகளை அடையாளம் கண்டு, விசா வழங்கும் முறையை எளிதாக்கியுள்ளது. குறிப்பாக, கீழ்கண்ட துறைகளில் பணியாற்றும்வர்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன:
- சுகாதாரத்துறை: மருத்துவர்கள், செவிலியர்கள், பல்லியல் மருத்துவர், மருந்தாளுநர், உளவியல் நிபுணர்கள்
- கட்டுமானத் துறை: ஒப்பந்தக்காரர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு துளையிடுதல் மற்றும் சேவைகள்
- சமூக சேவை: ஆசிரியர்கள், குழந்தை பராமரிப்பு கல்வியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பயிற்றுவிப்பாளர்கள்
- தொழிற்துறை: மேக்கானிக், தச்சர்கள், கார்பண்டர்கள் போன்ற தொழிலாளர்கள்
பிரஞ்சு மொழி (Francophone) பேசத்தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் IRCC தெரிவித்துள்ளது.
புதிய நிரந்தர குடியுரிமை (PR) வழிகள்
2025-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், கனடா நான்கு புதிய நிரந்தர குடியுரிமை (PR) வழிகளை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் தொழிலாளர் தட்டுப்பாடு தீர்க்கப்படுவதுடன், மொழி பல்முகத்தன்மை ஊக்குவிக்கப்படும்.
"இம்மாற்றங்கள் கனடாவின் வளர்ச்சிக்கு முக்கியமாகும். தொழிலாளர்களை ஈர்த்து, பொருளாதாரத்தை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம்" என்று கனடா குடியேற்றத் துறை அமைச்சர் மார்க் மில்லர் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |